TN Weather Update: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:

வானிலை மையம் வெளியிட்டு இருந்த அறிக்கையில், சுமார் 5.8 கிமீ உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தன்படி, இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் பரவலாக மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாம்.

சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை

சென்னையில் நேற்று இரவு பொழிய தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Source: Read Full Article