வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக மழை கொட்டித்தீர்த்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 10.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, தென்காசி, தஞ்சை, நாகை, திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது

Source: Read Full Article