கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் கடந்த 9ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு

பின்னர் அவரது உடலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதாவது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு இன்னும் ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என முதலில் அறிக்கை வெளியானது. பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள்(வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் வி.எஸ்.பாபு உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறினர்.

இதையும் படிங்க: DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!

அறிக்கை வெளியிடாத மருத்துவமனை

இதனிடையே கடந்த 23ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஆனால் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு டிரக்கியாஸ் சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஏற்றார் போல் கடந்த சில நாட்களாவே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.

அதிமுக கேள்வி

இந்நிலையில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து தமிழக அரசுக்கு இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக மாநிலங்களை உறுப்பினர் இன்பதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்த விபரங்களை தொகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. பொதுநலன் கருதி, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article