Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?

Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
News Image

தமிழ்நாட்டில் சமீப நாட்களாக அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இந்தாண்டு எல் நினோவின் பாதிப்பு இருக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

அரிசி தேவை:

தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் அரிசி தேவையில் மிகவும் முக்கிய பங்கை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் ஆற்றி வருகின்றனர். இந்த மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 25 முதல் 30 லட்சம் டன் வரை அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு இல்லாததால் அங்கு அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கு வரும் அரிசியின் அளவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக ஜுன் 12ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இந்தாண்டு தாமதமாகவே திறக்கப்பட்டது.

உற்பத்தி பாதிப்பு:

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி வழக்கமாக நடைபெறும் 5.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இருந்து 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவாக குறைந்துள்ளது. மேலும், தண்ணீர் திறப்பு தாமதத்தால் குறுவை, தாளடி சாகுபடி வழக்கமாக நடைபெறும் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவு 8 லட்சமாக குறைந்துள்ளது.

பதுக்குகிறார்களா வியாபாரிகள்?

இந்த காரணங்கள் அரிசி விலை உயர்வுக்கு முக்கியமானதாக கூறப்பட்டாலும் மறுபக்கம் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரிசி விலையை வியாபாரிகள் செயற்கையாக உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே கையில் இருப்பில் உள்ள அரிசிகளை பதுக்கி வைத்திருப்பதுடன், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து அதை ஆலையில் அரைத்து அரிசிகளை நேரடியாக தங்களது குடோன்களில் பதுக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது அரிசி விலை ரூபாய் 25 முதல் ரூபாய் 50 வரை உயர்ந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாக தலையிட்டு அரிசி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மளிகை பொருட்கள் விலையும் உயர்வு:

தமிழ்நாட்டின் உணவு தேவையில் அரிசி அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. அரிசி விலை உயர்வால் உணவகங்களில் சாப்பாடு விலையும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி உளுந்து, துவரம் பருப்பு, கடலை, நிலக்கடலை, சின்ன வெங்காயம், பாதாம் பருப்பு என பல அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks