VOC Port: தூத்துக்குடிக்கு ரூ.17,000 கோடியில் மெகா ப்ராஜெக்ட்..! இரண்டாக உடைத்த மத்திய அரசு - டெண்டர் வருமா?

VOC Port: தூத்துக்குடிக்கு ரூ.17,000 கோடியில் மெகா ப்ராஜெக்ட்..! இரண்டாக உடைத்த மத்திய அரசு - டெண்டர் வருமா?
News Image

Thoothukudi VOC Port: தூத்துக்குடியில் கண்டெய்னர் முனையத்தை அமைப்பதற்கான டெண்டரை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆன பிறகும், யாரும் ஆர்வம் காட்டாததால் தற்போது அது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் - மறுடெண்டர் திட்டம்

தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் அமைக்கப்பட உள்ள வெளிப்புற கன்டெய்னர் முனையமானது கனவுத்திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான டெண்டர் வெளியிட்டு இரண்டு ஆண்டுகளாகியும் ஒருவர் கூட அதில் ஆர்வம் காட்டுவில்லை. எனவே அதனை சீர்திருத்தம் வகையில் திட்டத்தை இரண்டாக பிரித்து புதிய டெண்டரை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, கன்டெய்னர் முனையத்தின் முக்கிய உட்கட்டமைப்பை கட்டும் பொறுப்பு துறைமுக ஆணையத்திடமே ஒப்படைக்கப்பட உள்ளதாம். 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மறுசீரமைக்கப்பட்ட திட்டமானது கடந்த வாரம் மத்திய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்திய கிழக்கு கடற்கரை பிராந்தியத்தில் தூத்துக்குடி வ.உ. சி துறைமுகத்தை முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாக மாற்றும் நோக்கிலான இந்த திட்டத்திற்கு, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

புதிய திட்டம் என்ன?

ஒரே திட்டத்திற்காக 17 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவது என்பது மிகப்பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது. நீண்ட கால முயற்சியின் மூலம் மட்டுமே இந்த தொகை மீண்டும் கைக்கு வரும் என்பதால், எந்தவொரு நிறுவனமும் இந்த டெண்டரை பெற ஆர்வம் காட்டவில்லை. இரண்டு முறை டெண்டர் வெளியிடப்பட்டும் யாரும் முன்வரவில்லை. அதன் காரணமாகவே தற்போது திட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ஹைப்ரிட் ஆண்டுத்தொகை மாதிரி மூலம் 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுவான மைய உட்கட்டமைப்பு பணிகளை துறைமுக ஆணையமே மேற்கொள்ள உள்ளது. இதுபோக இயந்திரமயமாக்கல், முனைய செயல்பாடு மற்றும் பிற மேம்பாட்டு பணிகளை 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

கன்டெய்னர் முனையத்தின் விரிவான திட்ட விவரம்:

திட்டப் பணிகள் முடிவுற்றால், இந்த துறைமுகமானது 18 மீட்டர் ஆழம் தேவைப்படும் 20 அடிக்கு நிகரான 24 ஆயிரம் கன்டெய்னர்களை சுமந்து வரக்கூடிய மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களை கூட கையாளும் திறனை பெறும். இத்தகைய கப்பல்களானது சுமார் நான்கு கால்பந்து மைதானங்களுக்குச் சமமான 400 மீட்டருக்கும் அதிகமான நீளத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்ட திட்டத்தில் 40 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் வகையிலான இரண்டு முனையங்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால், தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் இதன் கொள்ளளவானது 52 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?

பழைய திட்டம் என்ன?

இந்தத் திட்டம் முதலில் 2024ம் ஆண்டில் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்கம் மற்றும் ஒப்படைப்பு மாதிரியில் ஒப்புதல் பெற்றது. இதுவே இத்தகைய முதல் முழுமையான பொது-தனியார் கூட்டாண்மை திட்டமாகும். இதில் ஒப்பந்ததாரர் முழு வசதியையும் கட்டமைத்து, சுமார் ரூ. 7.000 கோடி மதிப்பீட்டில் அதை இயக்க வேண்டும். இது 16 மீட்டர் ஆழம் கொண்ட, 18 ஆயிரம் கன்டெய்னர்களை சுமக்கும் திறன் வாய்ந்த கப்பல்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. காலம் காலமாக, துறைமுக ஆணையம் பொதுவான உட்கட்டமைப்புகளை உருவாக்கும் வேளையில், தனியார் நிறுவனங்கள் உபகரணங்களில் முதலீடு செய்து முனையங்களை இயக்கும். அதனை மாற்றும் வகையில் அரசு எடுத்த முன்னெடுப்பு வெற்றியை அளிக்காத நிலையில், மீண்டும் பழைய நிலையிலேயே வ.உ. சி., துறைமுக கன்டெய்னர் முனையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks