Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி

Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
News Image

CM Vijay Speech: முதலமைச்சர் விஜய் தனது வழக்கமான பரப்புரை பாணியையே மாற்றி, அதிமுகவை மிகப்பெரிய அளவில் குறிவைத்து தாராபுரத்தில் பேசியுள்ளார்.

பரப்புரை ஸ்டைலை மாற்றிய முதலமைச்சர் விஜய்..!

முதலமைச்சர் விஜய் ஆவேசமான வசனங்கள், அதிரடியான குற்றச்சாட்டுகள், மக்களை எளிதில் வகையான பேச்சு ஆகியவற்றால் தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். தேர்தல் பரப்புரைகளின் போது பிரதான எதிரியான திமுகவை முன்னிலைப்படுத்தி அடித்து ஆடுவதோடு, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை மற்றும் பலர் எனவே குறிப்பிட்டு வந்தார். அதோடு, உரைக்கு நடுவில் ஒரு பகுதியாகவே தவெக மக்களுக்காக என்ன மாதிரியான திட்டங்களை கொண்டுவரவுள்ளது, எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன மாதிரியான வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க உள்ளது என குறிப்பிடுவார். ஆனால், நேற்று தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், தனது வழக்கமான பாணியை முற்றிலுமாக மாற்றியுள்ளார். அந்த பகுதியின் தேவைகள், அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், பரிசீலனையில் உள்ள திட்டங்கள், அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள் ஆகியவற்றை முன்னிலைபடுத்தி பேசியுள்ளார்.

திட்டங்களுக்கு முக்கியத்துவம்..!

தாராபுரம் மாருதி நகரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “லஞ்ச, லாவண்யமற்ற நிர்வாகத்தை வழங்க  உறுதிபட பணியாற்றி வருகிறோம், 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம், 200 யூனிட் விலையில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, காலை உணவு திட்டம் 8ம் வகுப்பிற்கு விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிர திட்டம், அக்.2 முதல் மகளிருக்கான இலவச போக்குவரத்து விரிவாக்கம், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம், விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் 25 லட்சமாக உயர்வு, முதல் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு” என தவெக அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார்.

அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் விஜய்:

அதன் பிறகு அரசியல் விமர்சனங்கள் பக்கம் திரும்பிய முதலமைச்சர் விஜய், ”பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக தற்போது திமுகவின் பிரிவாக மாறியுள்ளது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் ஒரே முதலாளி தான். இவர்கள் என்ன சதி வேலை செய்தாலும், கடவுளும், மக்களும் நம்முடன் இருக்கும்போது எதுவும் நடக்காது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், தீய சக்தி திமுகவை எதிர்த்து அரசியல் செய்தனர். அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க திட்டமிட்டால், அதை அதிமுக தொண்டர்களால் எப்படி ஏற்க முடியும்? இது, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல ஆகாதா? அந்த வலி, வேதனையை அ.தி.மு.க., தொண்டர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என ஆவேசமாக பேசினார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை

அதிமுகவை குறிவைத்தது ஏன்?

வழக்கமாக அதிமுகவை மற்றும் பலர் என குறிப்பிட்டுவிட்டு முதலமைச்சர் விஜய் கடந்துபோய்விடுவார். ஆனால், நேற்றைய பரப்புரையில் அதிமுக மீது காட்டமான பல விமர்சனங்களை முன்வைத்தார். காரணம், திமுக தான் தனது ஒரே எதிரி என தவெக கூறிக்கொண்டாலும், தாராபுரத்தில் அவர்களுக்கு அதிமுக தான் கடும் நெருக்கடி அளித்து வருகிறது. அங்கு கணிசமான வாக்குகளை கொண்டுள்ள கவுண்டர் சமூகம் அதிமுகவின் பெரும்  பலமாக பார்க்கப்படுகிறது. அந்த ஓட்டுகளை குறிவைத்தே முதலமைச்சர் விஜய் நேற்று பேசியுள்ளார். நீதிமன்ற உத்தரவு என்பதோடு, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் தான் ஜெம் வீரமணி என்பதால், அந்த வழக்கு குறித்து எந்தவொரு கருத்தையும் நேற்றைய பரப்புரையில் முதலமைச்சர் விஜய் குறிப்பிடவில்லை. மாறாக அந்த பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள், நீண்ட காலமாக தொடரும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். எனவே, களத்தில் உண்மையான எதிரி யார்? என்பதை உணர்ந்ததாலே தனது வழக்கமான பாணியை மாற்றி முதலமைச்சர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks