VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு

VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
News Image

Minister VanniArasu: பார்ப்பனிய அடிமைகளை விடுதலை சிறுத்தைகள் ஏற்காது என அமைச்சர் வன்னியரசு சாடியுள்ளார்.

நாதக வேட்பாளர் கார்த்திகா கைது..!

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது முதலமைச்சர் விஜயின் பரப்புரைக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகளில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட பாஜக, பாமக, அமமுக மற்றும் கம்யூனிஸ்ட்கள் என பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையும், ஆதரவு கருத்துகளையும் தெரிவித்தனர். நிபந்தனைகள் இன்றி கார்த்திகாவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அரசியல் தலைவர்களுக்கு சீமான் நன்றி

இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட பதிவில், “அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், அன்புமணி, கனிமொழி, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும்” நன்றி தெரிவித்துள்ளார். இதனை குறிப்பிட்டு விசிகவைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசு வெளியிட்டுள்ள பதிவில் திமுகவிற்கும் வெட்கமில்லை, நாதகவிற்கும் வெட்கமில்லை என கடுமையாக சாடியுள்ளார்.

”பெரியாரை இழிவுபடுத்தியவர் சீமான்”

வன்னியரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என
வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் சீமான். திராவிடக்கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும்  அரசியல்படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும். அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும்  திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான்.

இதையும் படியுங்கள்: AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்

”பார்ப்பனிய அடிமைகளை ஏற்கமாட்டோம்”

அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த  பார்ப்பனிய அடிமை தான் சீமான். இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை   திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை  தந்தை பெரியாரையும்  புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை” என அமைச்சர் வன்னியரசு கடுமையாக சாடியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks