தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாக மாறப்போவதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான ஹாட்ஸ்பாட்களாக இருக்கப்போகிறது.

தெற்கு தமிழ்நாடு

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பிற தெற்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!

மேற்கு தமிழ்நாடு

அதேபோல் வங்கக்கடலில் உருவாகியுள்ள வானிலை அமைப்பு நாளை அரபிக்கடலை நோக்கி நகரும் போது திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கனமழை

உள் மாவட்டங்கள் முதல் கடலோரப் பகுதிகள் வரை, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களிலும் கணிசமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் பகல் நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் போல கோவையிலும்! பைக் ரேஸர்களால் பதறும் பொதுமக்கள்.! வீலிங் செய்து அட்ராசிட்டி!

மேலும் மன்னார் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் போது, அது கிழக்கு திசையிலிருந்து காற்றையும், மழை மேகங்களையும் உள் மாவட்டங்கள் வரை ஈர்க்கக்கூடும். இதனால் சென்னை மட்டுமல்லாமல், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சென்னையில் பகல் நேரத்தில்கூட, திடீரென குறுகிய காலத்திற்கு தீவிரமான மழை பெய்யக்கூடும். என தெரிவித்துள்ளார்.

KTCCக்கு மழை எச்சரிக்கை

மற்றொரு ட்வீட்டில் அக்டோபர் 23 முதல் 25ம் தேதி வரை வட மாவட்டங்கள் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்படும் மாற்றங்களால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC) உள்ளிட்ட மழை அதிகமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, அடுத்த 3 நாட்களும் தமிழகம் முழுவதும் மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article