UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தால் விலைவாசி மேலும் உயரும் !! வணிகர் சங்கம் எச்சரிக்கை

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தால் விலைவாசி மேலும் உயரும் !! வணிகர் சங்கம் எச்சரிக்கை
News Image

"UPI கட்டண உயர்வு"

நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் , யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால் விலைவாசி மேலும் உயரும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில் , இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை ஏற்று பேசிய ஏ.எம். விக்கிரமராஜா ;

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதன் சுமை பொருட்களின் விலையில் எதிரொலிக்கும். இதனால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்மணிகளைப் பாதுகாக்கும் வகையில் , அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனமான லூலூ சந்தை அமைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக விரைவில் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் விக்கிரமராஜா தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks