Udhayanidhi: "ஓம் காளி.. ஜெய் காளி.. விஜய் ஒரு ஓடு..லி" முதல்வரை திட்டிய சிறுவன்.. சிரித்துப் பார்த்த உதயநிதி! குவியும் கண்டனங்கள்!

Udhayanidhi: "ஓம் காளி.. ஜெய் காளி.. விஜய் ஒரு ஓடு..லி" முதல்வரை திட்டிய சிறுவன்.. சிரித்துப் பார்த்த உதயநிதி! குவியும் கண்டனங்கள்!
News Image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் மட்டும் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவி வருகிறது.

கடும் போட்டி:

குறிப்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக-வை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக-விற்காக மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக-விற்கு ஆதரவாக இன்று தாராபுரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, தாராபுரம் நொச்சிக்குப்பத்தில் அவர் சிறுவன் ஒருவனை பிரச்சார வாகனத்தில் ஏற்றி திமுக-விற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

விஜய்யை விமர்சித்த சிறுவன்:

குழந்தையைத் தூக்கி வைத்து வாக்கு கேட்கச் செய்வது மட்டுமல்லாமல், முதல்வர் விஜயை இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் மைக்கில் சொல்ல வைப்பதா அரசியல் பிரச்சாரம்?

பிஞ்சு குழந்தையின் வாயில் அரசியலைத் திணித்து, அதை பிரச்சார ஆயுதமாக்குவது வெட்கக்கேடானது. pic.twitter.com/aUwmZw4O5y
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) October 3, 2026

அப்போது, அந்த சிறுவன் போடுங்கம்மா ஓட்டு.. உதயசூரியனைப் பார்த்து என்று கூறினார். பின்னர், கூட்டத்தில் இருந்த நபர்கள் ஓம் காளி.. ஜெய் காளி என்று விஜய்யை விமர்சிக்க கூறினார். அப்போது, அதைக் சிரித்துக் கொண்டே கேட்ட உதயநிதியும் ஓம் காளி, ஜெய்காளி என்று கூறியதுடன் தன் மைக்கை அந்த சிறுவனிடம் நீட்டினார்.

அப்போது, அந்த சிறுவன் ஓம் காளி.. ஜெய் காளி.. விஜய் ஒரு ஓடுகாலி என்று விமர்சித்துப் பேசினார். அதை சிரித்துக் கொண்டே உதயநிதி கேட்டார். அரசியலில் சிறுவர்களை விஜய் பயன்படுத்துவதாக திமுக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது திமுக சட்டமன்ற தலைவரான உதயநிதியே சிறுவர்கள் மூலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

உதயநிதிக்கு குவியும் கண்டனங்கள்:

மேலும், சிறுவர்களிடம் முதலமைச்சர் என்றும் பாராமல் வசைபாடச் சொல்லி உதயநிதி ஸ்டாலின் ஊக்கப்படுத்தியதற்கும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவகேலி செய்ததற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், சிறுவன் மூலமாக முதலமைச்சரை உதயநிதி வசைபாடச் சொல்லியிருப்பது மேலும் கண்டனத்தை குவித்து வருகிறது.

நாளையுடன் பரப்புரை ஓய்வடைய உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் நாளை மீண்டும் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks