TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி

TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
News Image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் மெட்ரோ பணிகள், மோசமான சாலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையை அச்சுறுத்தும் மழை:

இந்த நிலையில், சென்னையில் ஆங்காங்கே தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற தவெக அரசால் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மழைநீர் அதிகம் தேங்கும் வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணி சவாலாகவே இருந்தது.

தவெக அரசு அலட்சியப்போக்காக செயல்படுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தவெக ஐடி விங் சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

வெட்கமே இல்லையா?

திமுக ஆட்சியில் கட்டமைப்பை ஏற்படுத்தியதால்தான் கடந்த 5 ஆண்டுகளில் தண்ணீர் தேக்கம் இல்லை என்று பத்திரிகையாளர் முன்பு கொஞ்சம் கூட மனசாட்சியின்றி, வாய் கூசாமல் அப்பட்டமான பொய்யைப் பேச உங்களுக்கு வெட்கமா இல்லையா சேகர்பாபு?

கரப்ஷன் கட்டமைப்புக் கழகமான திமுகவின் தில்லுமுல்லு https://t.co/5AA2cUD9JB
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 24, 2026

ஆட்சியில் இருந்த போது முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது ஏன் அறநிலையத்துறையில் தண்ணீர் தேங்கப்போகிறது. மழைநீர் வடிகால் பணிகளுக்கான 4 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டி வாயில் போட்டதன் விளைவுதான் இந்த அவலம்.

அசிங்கமா இல்லையா?

2023ல் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தையே வெள்ளத்தில் மிதக்கவிட்ட நீங்கள், ஊரைச் சீரமைத்தோம் என கதை விடுவது அசிங்கமா இல்லையா?

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சென்னையில் உள்ள மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்போதைய அமைச்சர்கள் பேட்டி அளித்திருந்தனர்.

ஆனால், கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களிலும் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றதும், மக்கள் அவதியுற்றதையும் தற்போது சுட்டிக்காட்டி தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks