நடுத்தர வர்க்கத்தினராக வாழும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் கூடுதல் குடும்ப செலவினத்தைச் சமாளிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பண்டிகை கால முன்பணக்கடன் அளித்து வருகிறது. இக்கடன் ஒரு ஆண்டில் ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். மேலும், இக்கடனுக்கு வட்டி கிடையாது. பத்து மாதம் தவணைகளாக இது மாத ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்பட்டு அரசுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் கடன் மற்றும் முன்பணம் பெறும் நடைமுறையை எளிமையாக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் முன்பணத்தை பெற 6 ஆண்டுகள் தகுதி தேவை இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

கடன்கள் மற்றும் முன்பணங்கள் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, ஊழியர்களுக்கான நலன் சார்ந்த நிதியுதவிகள் விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்ய வழிவகை செய்யப்படும். அதன்படி, கணினி முன்பணம், இருசக்கர வாகன முன்பணம் மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். தற்போது நடைமுறையில் உள்ள பணிக்காலத் தகுதி ஆறு வருடம் என்பதிலிருந்து தளர்வு செய்யப்பட்டு, தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும்.

இதையும் படிங்க: Government Employees: அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. சாட்டையை சுழற்றிய ஐகோர்ட்!

முன்பணம்

மேலும், முன்பணம் வழங்குவதற்கான ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தாமதங்கள் குறைக்கப்பட்டு, ஊழியர்கள் எளிதாக பெறும் வகையில் செயல்முறைப்படுத்தப்படும். விண்ணப்பப் படிவங்கள் எளிமைப்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்நாள் கனவாகும். எனவே வீடு வாங்குவதற்கான முன்பணம் பெறுவதற்கான நடைமுறை எளிமையாகவும் மற்றும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தப்படும். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு மூன்றாம் தரப்பு முகவாண்மை சேவைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஆராயப்படும்.

கணினி முன்பணம், இருசக்கர வாகன முன்பணம் மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் பெறுவதற்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகளை திருத்தம் செய்து பின்வருமாறு அரசு ஆணை வெளியிடுகிறது:-

அரசின் அதிரடி சலுகைகள்:

* பணிக்கால தகுதி 6 வருடத்தில் இருந்து குறைப்பு!

இனி 6 வருடம் காத்திருக்க வேண்டாம். தகுதிகாண் பருவம் (Probation) முடித்த அரசு ஊழியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது லட்சக்கணக்கான இளம் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்!

* விண்ணப்பம் சூப்பர் ஈஸி

முன்பு கணினிக்கு படிவம் 1,2,3,4 மற்றும் வாகனத்துக்கு படிவம் 12,13,14 என தனித்தனியாக இருந்தது. இனி ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே படிவம் - படிவம் எண்.12 + கணினி முன்பணம் இணைப்பு-1 மட்டும் போதும்.

* கைமுறை வேண்டாம், முழுக்க முழுக்க டிஜிட்டல்!

முன்பு கைமுறையாக (Manually) விண்ணப்பிக்க வேண்டும். இனி IFHRMS மற்றும் கனகூசியம் சேவை (Kanaseeyam Sevai) மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

* பட்ஜெட் முறை மாற்றம்:

முன்பு DDO-வுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து செலவு செய்யப்பட்டது. இனி DTA நிலையில் மையப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் இருந்து செலவு செய்யப்படும். இதனால் நிதி தடையின்றி வேகமாக கிடைக்கும்.

* ஒப்பளிப்பு அதிகாரி:

துறைத் தலைவர் தான் இனியும் ஒப்பளிப்பு அலுவலர், பணி புரியும் அலுவலகத்தின் தலைமை அலுவலர் தான் தலைமை அலுவலர்.

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் நலனை பாதுகாக்கும் தமிழக அரசுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article