TVK: சீனியர், ஜூனியர் கோமாளிகள்... நிரந்தர தோல்வி தான்..ஸ்டாலின், உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக!

TVK: சீனியர், ஜூனியர் கோமாளிகள்... நிரந்தர தோல்வி தான்..ஸ்டாலின், உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக!
News Image

திமுகவும், அவர்களின் செயல்களை எல்லாம் ஆதரித்து வருபவர்களும் மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி என தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஸ்டாலின் பரப்புரை

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் நாளை மறுநாள் (அக்டோபர் 6) தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவி வரும் நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களும்,கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

தவெகவை கோமாளி கூட்டம் என பேச்சு

அப்போது தவெகவையும், முதலமைச்சர் விஜயையும் ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசும்போது, “கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக செய்த ஒரே தவறு தான். தவெகவை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. கொள்கை எதிரிகளோடு நாம் மோதினோம். இந்த கோமாளி கூட்டத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டோம். ஒரு சில காரணங்களால் தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆட்சி அமைத்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது தான் யதார்த்தம். தவெக அலை வீசியது உண்மை என்றால் அவர்களுக்கு150 இடங்கள் கிடைத்திருக்கும்” என தெரிவித்தார். இதற்கு தவெக தலைவர்கள், தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தவெக ஐடி விங் கடும் விமர்சனம்

இதனிடையே ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிலடி பதிவில், “கொளத்தூரில் மக்களால் கோமாளி ஆக்கப்பட்ட ஒருவர், மக்கள் சக்தியின் பேராதரவு பெற்றவரைப் ஆதரிக்கும் தமிழக மக்களைக் கோமாளிக் கூட்டம் என்று கொக்கரிக்கிறார்.

சீனியர் கோமாளியாக இருந்துகொண்டு, ஜூனியர் கோமாளியையும் தன்னைப் போலவே ஆபாசக் கோமாளியாகவும் அவதூறு கோமாளியாகவும் வன்மக் கோமாளியாகவும் வக்கிரக் கோமாளியாகவும் வளர்த்து, தமிழ்நாடு முழுக்க வலம் வரச் செய்கிறார். ஆபாசமாகவும் அவதூறாகவும் கண்டதையும் உளறிக் கொட்டி சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோமாளிகள் வரிசையில் இடம்பெறத் துடித்து இயங்கி வருகின்றனர்.

மக்களை ஏமாளிகளாக நினைத்து வெற்று விளம்பர மாடல் அரசு நடத்தி ஏமாற்றி வந்த இந்த கோமாளிக் கும்பலை, ஆட்சி அதிகார எல்லைக்குள்கூட வரவிடாமல் மக்கள் துரத்திய விரக்தியில், இன்னும் அதிக அளவிலானக் கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இனி எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும் இந்த சீனியர் கோமாளியும் அவர் தன் கூடவே சுமந்து அலையும் ஜூனியர் கோமாளியும் அவர்களுடன் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு அலையும் கோமாளிகள் கும்பலும் மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி” என தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks