தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஒப்பந்த பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான திமுக-வும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

போலிக் கொந்தளிப்பு:

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை Outsourcing முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு எதைச் செய்தாலும், “இதை நாங்கள்தான் செய்தோம்” என்று Credit Steal செய்து Sticker ஒட்டிக்கொள்ளும் Senior Generational Abuser தலைமையிலான திமுகவினர், இது தவெக அரசு செய்தது எனப் போலிக் கொந்தளிப்பில் குதிக்கின்றனர்.

உத்தமர் வேடம் கட்டும் ஊழல் வாரிசுகள்:

திமுகவின் இரட்டை நிலைப்பாடு ! தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை Outsourcing முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு எதைச் செய்தாலும், “இதை நாங்கள்தான் செய்தோம்” என்று Credit Steal செய்து Sticker ஒட்டிக்கொள்ளும் Senior Generational Abuser தலைமையிலான திமுகவினர், இது தவெக அரசு செய்தது எனப் போலிக் கொந்தளிப்பில் குதிக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு Outsourcing முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நடைமுறை அமலில் இருந்ததை வசதியாக மறைத்துவிட்டு, இன்று உத்தமர்கள் வேடம் கட்டுகின்றனர் ஊழல் இலக்கியத்தின் வாரிசுகள்! திமுக ஆட்சிக் காலத்தில் OMCL நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை அரசுத் துறைகளுக்கு Outsourcing முறையில் வழங்கியுள்ளது. அன்றைய நிதித்துறையின் உத்தரவின்படி, அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்கு Outsourcing முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிலையான விலை ஒப்பந்தம் (Standard Rate Contract) இறுதி செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாகச் சென்னை மற்றும் பிற மண்டலங்களைச் சேர்ந்த 21 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. தங்கள் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒரு முறையை மறைத்துவிட்டு, அரசியல் காழ்ப்பில் அவதூறு பரப்பி அரற்றிக் கொண்டிருக்கும் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் கூடாரமே! Shoulder-ஐ இறக்கு ! அதேநேரத்தில், இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயல்படும் தவெக அரசு, மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசே தவெக அரசு !

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 29, 2026

ஆனால், திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு Outsourcing முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நடைமுறை அமலில் இருந்ததை வசதியாக மறைத்துவிட்டு, இன்று உத்தமர்கள் வேடம் கட்டுகின்றனர் ஊழல் இலக்கியத்தின் வாரிசுகள்!

திமுக ஆட்சிக் காலத்தில் OMCL நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை அரசுத் துறைகளுக்கு Outsourcing முறையில் வழங்கியுள்ளது.

சித்தரஞ்சன் சாலை மூர்த்தி:

அன்றைய நிதித்துறையின் உத்தரவின்படி, அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்கு Outsourcing முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிலையான விலை ஒப்பந்தம் (Standard Rate Contract) இறுதி செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாகச் சென்னை மற்றும் பிற மண்டலங்களைச் சேர்ந்த 21 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தங்கள் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒரு முறையை மறைத்துவிட்டு, அரசியல் காழ்ப்பில் அவதூறு பரப்பி அரற்றிக் கொண்டிருக்கும் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் கூடாரமே! Shoulder-ஐ இறக்கு !

அரசாணை:

அதேநேரத்தில், இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயல்படும் தவெக அரசு, மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது.

இளைஞர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசே தவெக அரசு !

இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article