TVK On Stalin: முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தான் காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதாக, தமிழக வெற்றிக் கழகம் விளக்கமளித்துள்ளது.

தவெக அரசை விமர்சித்த ஸ்டாலின்:

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தவெகவால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தவெகவிடமிருந்து தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் அந்த கட்சியில் பங்களித்து வருகின்றனர்.இது ஒரு நிர்வாக திறனற்ற அரசு என காட்டமாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

”தான்தோன்றி தனமாக செயல்பட்ட ஸ்டாலின்”

தவெக வெளியிட்டுள்ள பதிவில், “காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி. சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே! சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள்.

இதையும் படியுங்கள்: Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்

பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டிய தவெக அரசு

தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் முதலமைச்சர், வெற்றித் தலைவர் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே! திமுக ஆட்சியில், திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது.

எந்த ஜோசியரின் ஆலோசனை இது?

குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை. திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது. Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள். அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?

Source: Read Full Article