டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
News Image
பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை நாளை மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ரயில் இயக்கப்படும் நேர விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-11 வழித்தடம் 4-ல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் நாளை அக்டோபர் 11, 2026 முதல் மெட்ரோ இரயில் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது. பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை. கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், அயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ இரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன.
தொடக்க நாளான 11 அக்டோபர் 2026 அன்று, மெட்ரோ இரயில் சேவைகள் மாலை 4 மணி முதல் தொடங்கி, இரு திசைகளிலும் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மறுநாளான 12 அக்டோபர் 2026 முதல், இந்த 15 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.
நாள்தோறும் இரு முனையங்களிலிருந்தும் (பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4 வடபழனி மெட்ரோ) கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 9 மணிக்கு புறப்படும். பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தி, தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[tw]
பூவிருந்தவல்லி - வடபழனி இடையே காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் I https://t.co/LRXU10pMDY #poonamallae #vadapalani #cmrl #chennaimetro #tngovt #abpnadu https://t.co/ngXljM0NjM
— ABP Nadu (@abpnadu) October 10, 2026
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks