TN Weather News: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை

TN Weather News: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
News Image

Tamil Nadu Weather Update (21-10-2026): சென்னையில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது.

வானிலை மையம் எச்சரிக்கை:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 5.8 கிமீ உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதே பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது. சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரா பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

மிக கனமழைக்கான வார்னிங்

அதனால் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கான வானிலை:

22-10-2026: தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

23-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

24-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் ஆகியோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks