TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?

TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
News Image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்த 1 மணி நேரம்:

மாநிலத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து மழை வாட்டி வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

35 மாவட்டங்களில் மழை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கருதப்படுகிறது.

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை இடி மற்றும் மின்னலுடன் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://t.co/Wb46fADXQD
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 25, 2026

பள்ளிகள் விடுமுறை:

மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை மழை நிலவரத்தைப் பொறுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

காத்திருக்கும் புயல்:

தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் மழையின் தாக்கம் பெரியளவில் அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks