TN Govt Vettri Payanam: தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தால் ஆண்களுக்கான பேருந்து கட்டணம், 3 ரூபாய் வரையில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டம்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் வெற்றிப்பயணம் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 7 போக்குவரத்துக் கழகங்களின் மாநகர், நகர்புற சாதாரணப் பேருந்துகள் மற்றும் மலைப் பகுதிகளில் 40 கி.மீ. வரை மட்டுமே மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்துவந்த நிலையில், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) உட்பட மொத்தமாக 12,695 பேருந்துகளில் மகளிர் கட்டமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு அடித்த ஜாக்பாட்

இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிப் பயணம் திட்டம் வாயிலாக ஆண்களுக்கான பேருந்து கட்டணங்களும் குறைந்து இருப்பது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு பேருந்துகளின் வகைப்பாடு மாற்றப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் 3 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 12 ரூபாய் வரையில் பேருந்து கட்டணம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரே திட்டத்தால் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கான பயண செலவையும் அரசு குறைத்துள்ளதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

பேருந்து கட்டணம் குறைய காரணம் என்ன?

இதுகுறித்து பேசிய நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், “அரசு போக்குவரத்து துறையில் இடைநிற்றல் இல்லாத பேருந்துகள், விரைவு பேருந்துகள், சாதாரண பேருந்துகள், தாழ்தள சொகுசு பேருந்துகள் மற்றும் டவுன் பேருந்துகள் என்ற வகைப்பாட்டில் இயக்கப்படுகின்றன. இதில் பெண்களுக்கு வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சேவைகளை வழங்க பணிகளை தொடங்கியபோது, சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனவே அவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பல்வேறு விரைவு பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக வகைப்படுத்தப்பட்டன. அதன் விளைவாகவே சில பேருந்துகளில் ஆண்களுக்கான கட்டணம் என்பது குறைந்துள்ளது. அதேநேரம், விரைவு பேருந்துகள் மற்றும் இடைநிற்றல் இல்லாத பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி திகழ்கிறது.

இதையும் படியுங்கள்: Nana Padekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்

12 ரூபாய் வரையில் குறைந்த டிக்கெட் கட்டணம்:

உதாரணமாக, நெல்லையிலிருந்து திருச்சி பயணத்திற்கு 50 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 38 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் நெல்லை - தூத்துக்குடி இடையே இடைநிற்றல் இல்லாத பேருந்து டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில் 40 ரூபாயும், சாதாரண பேருந்துகளில் 35 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 128 பேருந்துகள் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்களுக்கான பேருந்து கட்டணம் 10 ரூபாயிலிருந்து 7 ரூபாயாக குறைந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 65 பேருந்துகளில் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.

திருச்சியில் இருந்து துறையூருக்கு வழக்கமாக இயக்கப்படும் விரைவு பேருந்துகளில் 40 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது வெற்றிப் பயண பேருந்துகளில் 30 ரூபாயாக குறைந்துள்ளது.

Source: Read Full Article