TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!

TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
News Image

TN Govt Car For MLA: அமைச்சர்களுக்கான கார் வழங்க தலா 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எம்.எல்.ஏக்களுக்கு கார் - நிதி ஒதுக்கீடு

சட்டப்பேரவையில் விசிக எம்.ல்.ஏ., வின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பிலேயே கார் வழஙிகப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். இதன் மூலம் எம்.எல்.ஏக்களுக்கான நிதி நெருக்கடி குறைக்கப்பட்டு லஞ்சம் தவிரிக்கப்பட வாய்ப்புள்ளதோடு, தொகுதி முழுவதும் பயணித்து மக்களின் குறைகளை அறிய முடியும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம், அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தங்களுக்கு இந்த கார் வேண்டாம் என திமுக தரப்பு அறிவித்தது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் இதே நிலைப்பாட்டை அறிவித்தனர். இந்நிலையில் தான், தமிழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான புதிய விதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ரூ.26 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு..!

1955-ம் ஆண்டு சட்டமன்ற பயணப்படி விதிகளில் திருத்தம் செய்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,

அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு ரூ.26 லட்சம் மதிப்பீடு வரையில் கார் வாங்கலாம்

மற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும்  ரூ.15 லட்சம் மதிப்பீடுய் வரையில் கார் வாங்கலாம்

இந்த விலை என்பது வெறும் Ex-Showroom விலை மட்டும் இல்லை, வரி, ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம், இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்து தான். ஒவ்வொரு ஆண்டும் இந்த உச்சவரம்பு 5 சதவிகிதம் கூடும்

இதையும் படியுங்கள்: TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை

கார் கொள்முதல் நடவடிக்கை:

அனைத்து கார்களும் Government GeM Portal மூலமாகவும், BS-VI விதிகளின்படியும் தான் வாங்கப்பட வேண்டும்

அமைச்சர்களுக்கான காரை அரசே அரசின் பெயரில் வாங்கும்

சபாநாயகர் உள்ளிட்டோருக்கு சட்டமன்ற செயலகமும், மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் காரை வாங்கி தருவார்கள்

பெட்ரோல், டிரைவர், மெயின்டனன்ஸ்..

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் காருக்கான பெட்ரோல், டிரைவர், பராமரிப்பு செலவை பொதுத்துறை பார்த்துக்கொள்ளும்

சபாநாயகர் உள்ளிட்டோருக்கு சட்டமன்ற செயலகம் கவனித்துக் கொள்ளும்

மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு வாகனப்படியில் இருந்து அவர்களே செலவை பார்த்துக்கொள்ள வேண்டும்.

கட்டாய நிபந்தனைகள்:

பயனர்களின் பதவி காலம் முடிந்தாலோ, இறந்தாலோ, பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, ராஜினாமா செய்தாலோ உடனடியாக காரை அரசிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டம் அவசியம் தானா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரம், சட்டமன்ற பிரதிநிதிகளின் நிதிச்சுமையை குறைப்பதன் மூலம், அரசு பணம் கையாடல், தொகுதி வளர்ச்சி நிதி முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட புகார்களை குறைக்க முடியும், மக்களுக்கான திட்டங்களை ஊழலின்றி நிறைவேற்ற முடியும் என முதலமைச்சர் விஜய் நம்புகிறாராம்.

MLA-க்கள் ஏமாற்றம்..!

முதலமைச்சர் விஜய் கார் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபோது, தங்களுக்கு இன்னோவா காரை வழங்க அரசு முன்வர வேண்டும் என பல சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்போது எம்.எல்.ஏக்களுக்கான காருக்கான அதிகபட்ச நிதியே 15 லட்சம் ரூபாயாக மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை வரம்பில் இன்னோவா கார் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை என்பதால், எம்,எல்.ஏக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து போயுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks