TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி

TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
News Image

TN Govt STtudents Cake: பள்ளி மாணவர்களுக்கான கேக் ஒருமாத ஆயுட்காலத்தை கொண்டிருக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு விதிகளை நிர்ணயித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் அரசு:

முதல்முறையாக ஆசிரியர் தினமான நவம்பர் 14ம் தேதியன்று பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டரும் வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 61.84 லட்சம் குழந்தைகளுக்கு 4 வகையிலான கேக் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 45 கிராம் எடை கொண்ட ஒவ்வொரு கேக் துண்டும் 30 நாட்களுக்கு கெடாத வகையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இனிப்பு விருந்து

குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) கொண்டாட தமிழ்நாடு அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரம்மாண்டமான இனிப்பு விருந்துக்கு தயாராகி வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) வெளியிட்டுள்ள டெண்டர் விவரப்படி, 61 லட்சத்து 84 ஆயிரத்து 566மாணவர்களுக்கு பிராண்டட் Sponge Slice Cake வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடையில் தனித்தனி கவரில் பேக் செய்யப்பட்டிருக்கும். ஒரே சுவையிலான கேக்காக இல்லாமல், 4 வகை கேக்குகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. அதில் Mixed Fruit / Tutti-Frutti, Classic Vanilla, Rich Chocolate, Butter / Milk அடங்கும்.

கேக்கின் தரத்திற்கான விதிகள்:

கேக் மென்மையாக, பஞ்சு போல் இருக்க வேண்டும். பூஞ்சை, கெட்ட வாடை இருக்கக் கூடாது. Trans-fat, தடை செய்யப்பட்ட கலர்கள் அறவே கூடாது. நவ.14 அன்று குடோனுக்கு வரும்போதே இன்னும் 30 நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். பேக் செய்ய பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கவரிலும் பிராண்ட் பெயர், சுவை, 45g, FSSAI நம்பர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் அரசின் லோகோ இடம்பெற வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு சுவையிலும் சாம்பிள் கேக் கொடுத்து தரச்சான்றிதழ் பெற வேண்டும் என அரசு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?

ரூ.9.27 கோடிக்கு டெண்டர்

ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுக்கான கேக் வழங்க அரசு ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கேக் வழங்கப்படும். மதிய உணவுடன் சேர்த்து குழந்தைகள் தின ஸ்பெஷலாக இந்த இனிப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks