அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் கீழ் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 5 ரயில் நிலையங்கள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மத்தியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆண்டு வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2022 டிசம்பரில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் தொடக்கவிழா 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்றது.

Ambasamudram Railway Station is all set to welcome passengers with its revamped look today! Hon’ble Prime Minister will inaugurate 5 #AmritStations and dedicate rail infrastructure projects to the nation, strengthening connectivity across Tamil Nadu. #RailInfra4TamilNadu https://t.co/Nepmy7pqAW

— DRM MADURAI (@drmmadurai) October 11, 2026

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் கீழ் நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து கடந்த மே 22ம் தேதி இந்தத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட முதல் 103 ரயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் செயின்ட் தாமஸ் மவுண்ட், சமல்பட்டி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, போளூர், சிதம்பரம், விருத்தாசலம், மன்னார்குடி ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெற்றது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் 26 ரயில் நிலையங்களின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதில் அக்டோபர் 11ம் தேதியான இன்று ரூபாய் 750 கோடி மதிப்பிலான 1. பழனி, வேலூர் கண்டோன்மெண்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ஆகிய ரயில் நிலையங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

A new look, a new milestone! Palani Railway Station is all set for its inauguration today as an Amrit Station. Hon’ble PM will inaugurate 5 Amrit Stations and dedicate various rail infrastructure projects to the nation,across Tamil Nadu. #RailInfra4TamilNadu #SouthernRailway https://t.co/ilVotFQF7l

— DRM MADURAI (@drmmadurai) October 11, 2026

சென்னை வந்த பிரதமர் மோடி இதனை காணொளி காட்டி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 23 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட காரைக்கால் - பேரளம் புதிய வழித்தடம் மற்றும் காரமடை, சூலூர் மற்றும் துடியலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட 3 ரயில்வே மேம்பாலங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

Source: Read Full Article