TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு

TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
News Image

TN Govt Annan Seer: தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டத்திற்கு நடப்பாண்டில் 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டம்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதலே, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்கம், 200 யூனிட் விலையில்லா மின்சாரம், மகளிருக்கான விரிவான இலவச பேருந்து சேவை, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு, 8 கிராம் தங்கம் உள்ளிட்ட அண்ணன் சீர் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் என்ன? நடப்பாண்டில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 5 லட்சம் திருமணங்கள்:

திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் மரபில் திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் 'சீர்' என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணங்களில் மணப்பெண்களுக்கு அரசு அண்ணனாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் விதமாக, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மணப்பெண்களுக்கு அன்புப் பரிசாக எட்டு கிராம் தங்க நாணயமும். ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு ஆவணத்தின் ஒரு திட்டமாகும். இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டிலும் இருந்தது.

அண்ணன் சீர் - அரசாணை வெளியீடு

அந்த அறிவிப்பின்  தொடர்ச்சியாக அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த நிதி ஒதுக்கீடும் வழங்குமாறு சமூக நல இயக்குநர் அரசைக் கோரியுள்ளார். அதனை ஏற்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு - ரூ.2.5 லட்சம் வருமான வரம்பு

அரசாணையின் படி, தமிழ்நாட்டில் ரூ.2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின் போது  8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடிக்கு  நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.

8 கிராம் தங்கம் - யாருக்கு பலனளிக்கும்?

தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்பட உள்ளன.

திட்டத்தின் கொள்முதல் செயல்முறை

தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டம், 1998 (Tamil Nadu Transparency in Tenders Act, 1998) மற்றும் விதிகள் 2000-ன்படி திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும். பட்டுப் புடவையும் கொள்முதல் செய்யப்படும். தங்க நாணயத்தின் கொள்முதல் விலை கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று IBJA (India Bullion and Jewellers Association) அமைப்பால் நிர்ணயிக்கப்படும் விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும். இத்திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும். இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க விரைவில் பிரத்யேக இணையதளம் தொடங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

வருமான உச்சவரம்பு குறைப்பு

முன்னதாக ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கமும், பட்டுச் சேலையும் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தவெக அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது அந்த வருமான உச்சவரம்பானது ரூ.2.5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பயிர்க் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதிக்கு வரம்பு நிர்ணயித்ததே, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து பகுதியளவில் நிறைவேற்றுவதற்கு மாறாக, போதுமான நிதியை ஏற்பாடு செய்த பின்பு, அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks