TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்

TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
News Image

Udangudi Power Plant: உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தை விரிவாக்குவதன் மூலம், 4 அலகுகள் வாயிலாக 3 ஆயிரத்து 200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உடன்குடி அனல் மின் நிலையம்:

தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்து வரும் நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலை கொடுத்து வெளிசந்தையிலிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய தேவையும் இருக்காது. அந்த வகையில் தான் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தமிழ்நாடு அரசால் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 660 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு அலகுகளை அமைக்கும் திட்டம் 13 ஆயிரத்து 77 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் முதல் அலகு பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், டிசம்பருக்குள் மற்றொரு அலகும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம்:

முதற்கட்ட பணிகளே குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படவில்லை, திட்ட செலவு அதிகரிப்பு போன்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இதனிடையே, உடன்குடி அனல் மின் நிலைய திட்டத்தை விரிவாக்கம் செய்து இரண்டாம் (Stage II) மற்றும் மூன்றாம் (Stage III) கட்ட விரிவாக்கப் பணிகளில் தலா 660 மெகாவாட் திறனுடைய அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் இந்த நிலையத்தின் மொத்தம் உற்பத்தி திறன் 4 அலகுகள் வாயிலாக 2,640 மெகாவாட்டாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, தலா 800 மெகாவாட் திறனில் நான்கு அலகுகள் என மொத்தம் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் பங்களிப்பு மூலம் விரிவாக்கம்:

தமிழக மின் உற்பத்தி கழகத்தின் போர்டு 23.09.2026 அன்று கூடி, திட்ட விரிவாக்கம் தொடர்பாக முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி இதுவரை அரசே நேரடியாக கட்டி வந்த உடன்குடி திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு பெறப்பட உள்ளது.  போட்டிமுறை அடிப்படையில் இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை, அரசு அனுமதிகள், டெண்டர் வடிவமைப்பு, ஏலம் மதிப்பீடு, ஒப்பந்தம் வழங்குதல் என அனைத்து பணிகளுக்கும் தனியார் ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார். இதில் உடன்குடி ஸ்டேஜ்-I விரிவாக்கம் 1x800 MW, ஸ்டேஜ்-II & III 2x800 MW என மொத்தம் 3 திட்டங்களும் இந்த தனியார் பங்களிப்பில் தான் மேற்கொள்ளப்பட உள்ளதாம்.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும்..!

அரசின் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. ஒரு 800 மெகாவாட் திட்டம் கட்ட ரூ.8,000 கோடி ஆகும். 4 திட்டம் என்றால் ரூ.32,000 கோடி அரசு முதலீடு செய்ய வேண்டாம். அந்த செலவு மிச்சமாகும். தனியார் பங்களிப்பு என்பதால் வேலைகள் முழு வீச்சில் நடைபெறும், எந்தவித இழுபறியும் இன்றி திட்டமிட்டபடி பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், கழிவுகளும் வெகுவாக குறையும் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்திற்கு கூடுதல் விலை நிர்ணயித்தால், அது மின்கட்டணமாக மக்கள் மீது தான் சுமத்தப்படும். அரசு திட்டம் என்றால் புதிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கும். தனியார் பங்களிப்பு என்றால் அந்த வேலை வாய்ப்புகள் தனியாருக்கு போகும். மின் உற்பத்தி என்பது மாநிலத்தின் சொத்து. அதை தனியாருக்கு கொடுப்பது என்பது எதிர்காலத்தில் மின்சாரத்திற்கும் தனியாரையே நம்பி இருக்க வேண்டிய நிலை வரும் என ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks