TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?

TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
News Image

TN By Election Result 2026: தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. அதிமுக தரப்பில் இருந்து 6 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை:

இந்த இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. கடந்த 6ம் தேதி நடைபெற்ற இந்த இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களும் போட்டியிட்ட நிலையில் இன்று வெற்றி பெறப்போவது யார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எத்தனை சுற்றுகள்?

தாராபுரத்தில் 22 சுற்றுகளும், மதுராந்தகத்தில் 20 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் தலா 14 மேசைகள் போடப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் ஒரே இடத்திலும். மதுராந்தகம் தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் ஒரே வாக்கு எண்ணும் மையத்திலும் என இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இரு வாக்கு எண்ணும் மையங்களில் மட்டுமே நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சிசிடிவி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் வீடியோவாக பதிவு செய்யப்பட உள்ளது.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு சுற்று வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்த்து அடுத்தடுத்த சுற்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை மிகவும் தீவிரமாக கண்காணித்து ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் அறிவிப்பார்கள்.

5 முனைப்போட்டி:

ஆளுங்கட்சியாக தவெக அமைந்த பிறகு நடந்த இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு மிக மிக அவசியமானதாக அமைந்துள்ளது. தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி நிலவுகிறது.

வேட்பாளர்கள் யார்? யார்?

தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தாராபுரத்தில் பானுமதி, மதுராந்தகத்தில் கணிதா சம்பத் போட்டியிடுகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மாலை வரை நடைபெறும் என்றாலும் காலை 11 மணியளவிலே முன்னிலை நிலவரத்தின் அடிப்படையில் வெற்றியாளர் யார்? என்பதை அறிய முடியும் என்று கருத முடிகிறது. இந்த இடைத்தேர்தலின் வெற்றி தவெக-விற்கு மிக மிக அவசியமானதாக இருப்பதால் அவர்கள் இந்த இடைத்தேர்தல் முடிவை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks