Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!

Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!
News Image

திருப்பதி என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது இரண்டு விஷயம். ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில், மற்றொன்று திருப்பதி லட்டு பிரசாதமாகும். இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில் உணவும் வழங்கப்படுகிறது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் உண்டியல் காணிக்கை கோடிகளில் வருவாய் கிடைத்து வருகிறது.

9 மாதங்களில் ரூ.1,129 கோடி

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 மாதங்களில் உண்டியல் காணிக்கை ரூ.1,129 கோடி கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரித்துள்ளது. அதாவது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை தொடர்ந்து சாதனை அளவில் பதிவாகி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளன. செப்டம்பர் மாதம் வரை மொத்தமாக 9 மாதங்களில் மொத்தம் ரூ.1,129 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?

எந்தெந்த மாதங்களில் எத்தனை கோடி?

செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.126.41 கோடி, ஆகஸ்டு மாதம் ரூ.137.44 கோடி, ஜூலை மாதம் ரூ.140.25 கோடி, ஜூன் மாதம் ரூ.124.49 கோடி, மே மாதம் ரூ.113.53 கோடி, ஏப்ரல் மாதம் ரூ.115.97 கோடி, மார்ச் மாதம் ரூ.125.76 கோடி, பிப்ரவரி மாதம் 28 நாட்களுக்கு ரூ.107.36 கோடி, ஜனவரி மாதம் ரூ.124.55 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

2026-27ம் ஆண்டுக்கான வரவு- செலவு

திருப்பதி தேவஸ்தானம் 2026-27ம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்துக்கு ரூ.5,456 கோடி ஒப்புதல் அளித்துள்ளதுடன், உண்டியல் மூலம் ரூ.1,880 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளது. மார்ச் முதல் செப்டம்பர் வரை 7 மாதங்களில் மட்டும் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவஸ்தான ஊழியர்களின் சம்பளம்

அக்டோபர் மாதம் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உண்டியல் காணிக்கை மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. உண்டியல் காணிக்கை மூலம் தேவஸ்தான ஊழியர்களின் சம்பளம், பக்தர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks