Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!

Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
News Image

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு கோவில்கள் உள்ளன. இதில், 52 முக்கிய கோவில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சுவாமி தரிசனத்தின் போது பக்தர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும், கோவில்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் மற்றும் மூலவர் விக்ரகங்களைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தடுக்கவும் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

செல்போன் கொண்டு செல்ல தடை

கோவிலுக்குள் செல்லும் முன் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல கோவில் நுழைவுவாயில்களிலேயே 5 ரூபாய் கட்டணத்தில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. பக்தர்கள் மட்டுமன்றி, கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களும் கோவில் வளாகத்திற்குள் செல்போன்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையும் படிங்க: School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

எச்சரிக்கை

இதனை மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் விஐபிக்கள், சினிமா பிரபலங்கள் கோவில்களுக்கு வரும்போது அவர்களுடன் ஊடகத்தினர் அல்லது தனிப்பட்ட நபர்கள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தடை நீக்கம்

இதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.அவசர தேவைகளுக்கு தொடர்புகொள்ள முடியவில்லை என பக்தர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற இந்து அறநிலையத்துறை தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, பக்தர்கள் இனி தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்லலாம்.

ஆனால் கோயிலுக்குள் இருக்கும் வரை செல்போன் கண்டிப்பாகச் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். கோயிலுக்குள் சிலைகள் மற்றும் பூஜைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ, செல்ஃபி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் எடுப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த விதிகளை மீறி ரகசியமாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks