தமிழகத்தில் 4700க்கும் மேற்பட்ட டாஸ்டாக் கடைகள் செயல்பட்டு வந்தன. நாள் ஒன்றுக்கு 100 முதல் 120 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி உதவி திட்டங்களுக்கு நிதியை வாரி வழங்கும் பொக்கிஷமாக டாஸ்மாக் உள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து டாஸ்டாக்கில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.

டாஸ்மாக் கடைகள்

அதில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும் 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குடிமகன்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து கூடுதலாக வசூல் செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் மதுபானக்கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. மேலும் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யும் ஊழியர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது பாட்டில்கள் வாங்குவோர் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க: Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

மின்னணு பரிவர்த்தனை

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நிர்வாக இயக்குநர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களை வாங்கும்போது எழும் தேவையற்ற புகார்களைத் தவிர்க்கவும், ரொக்கமாக அதிக அளவிலான பணத்தினைக் கையாளுவதைத் தவிர்க்கவும், நுகர்வோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும் மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்திட வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நவம்பர் 1 முதல் புதிய நடைமுறை

இதன்படி, நவம்பர் 1 முதல் ஒரு விற்பனையில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் மின்னணு முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். அதேபோல, 2027 ஜனவரி 1 முதல் ஒரு விற்பனையில் ரூ.500-க்கு மேல் மதுபானம் வாங்கினாலும் மின்னணு முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.

நுகர்வோர் எளிமையாக இணையவழி மதுபான முன்பதிவு முறையில் மூலமும் தொகையினை செலுத்தி கடைக்கு நேரில் வந்து மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், நுகர்வோரின் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 889 2015 அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article