வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக இன்று உருவாகிறது. மிக தீவிர புயலாக வலுப்பெற்று அர்னாப் புயல் நாளை பாட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே முற்பகலில் கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

இதன் காரணமாக இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்ச, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!

படிப்படியாக மழை குறையும்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழகம் முழுவதும் பெரும்பாலும் மழையின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இந்த மழை பொழிவும் மாலைக்குப் பிறகு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வட இலங்கையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும என தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு எதிர்பார்த்த மழை இல்லை

முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை – புதுச்சேரி கடலோரப் பகுதிக்கு அருகில் கரையை கடக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அது தெற்கு திசையை நோக்கி நகர்ந்து, காவிரி டெல்டா மற்றும் இலங்கை கடலோரப் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், எதிர்பார்த்த மழை சென்னைக்குக் கிடைக்காமல் முற்றிலும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

அர்னாப் புயல்

மேலும் நாளை நண்பகல் முதல், 'அர்னாப்' புயல் (Cyclone Arnab) கிழக்குக் காற்றை தன்வசப்படுத்தி இழுத்துச் செல்வதால், தமிழ்நாடு முழுவதும் மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்து வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article