Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?

Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
News Image

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று ஆயுதபூஜை, விஜயதசமி ஆகும். இதற்கு அடுத்து கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை தீபாவளி ஆகும். அடுத்தடுத்த மாதங்களில் இந்த பண்டிகைகள் வருவது வழக்கம் ஆகும்.

சிறப்பு பேருந்துகள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இதுபோன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டிற்கான ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான பேருந்துகள் எங்கிருந்து? எந்தெந்த ஊர்களுக்கு இயக்கப்படுகிறது? என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

15 ஆயிரம் பேருந்துகள்:

ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 8 ஆயிரத்து 764 பேருந்துகளுடன் கூடுதலாக 6 ஆயிரத்து 199 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நான்கு நாட்களில் மொத்தமாக 14 ஆயிரத்து 963 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஆயுத பூஜை முடிந்த பின்னர் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய நாட்களில் சென்னைக்கு திரும்பும் 4 ஆயிரத்து 382 பேருந்துகளுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 809 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தமாக 9 ஆயிரத்து 191 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எங்கிருந்து எங்கே?

ஆயுத பூஜைக்கு எந்தெந்த ஊர்களுக்கான பேருந்துகள் எங்கெங்கு இருந்து இயக்கப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.

1. கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம்:

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்து இயக்கப்பட உள்ளது.

2. சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்த வெளி இடம், கிளாம்பாக்கம் ( தற்காலிக பேருந்து நிலையம்)

வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

3. மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம்: (சோதனை அடிப்படையில்)

கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

4. கோயம்பேடு பேருந்து நிலையம்:

ஈசிஆர் வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

5. மாதவரம்:

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்

இந்த பேருந்துகளில் செல்வதற்கு முன்பதிவு செய்வதற்கு கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும், மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என 14 முன்பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தீபாவளி:

ஆயுத பூஜை மட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்கும் இந்த ஊர்களுக்கு இதே இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது? என்ற விவரத்தையும் இன்றே அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்டார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கும் 6 ஆயிரத்து 573 பேருந்துகளுடன் கூடுதலாக 9 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தமாக 15 ஆயிரத்து 659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு அடுத்த மாதம் 9ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகிய நாட்களில் வழக்கமாக இயங்கும் 4 ஆயிரத்து 382 பேருந்துகளுடன் கூடுதலாக 6 ஆயிரத்து 815 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. புகார்கள் மற்றும் குறைகள் தெரிவிப்பதற்கு 94450 14436 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks