SIR விவகாரத்தில் திமுக ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? – அமைச்சர் வன்னியரசு கேள்வி

SIR விவகாரத்தில் திமுக ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? – அமைச்சர் வன்னியரசு கேள்வி
News Image

விழுப்புரம் : SIR மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட இயக்கம் திமுக என்று சொல்கிறார்கள். ஆனால் இதுவரை திமுக எந்தவித கருத்தும் சொல்லவில்லை, போராட்டத்திற்கு பங்கெடுக்கவில்லை. இந்தியா கூட்டணியில் உள்ள எம்பிக்கள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள், ஆனால் திமுக பங்கெடுக்கவில்லை -திண்டிவனத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேட்டி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பஞ்சமி நில மீட்புப் போராளிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

இடைத்தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு:

இது உறுதிப்படுத்தப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட வெற்றி தான். மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எங்களுடைய தலைவர் எழுச்சி தமிழர் இந்த கூட்டணியே வெற்றி பெறும், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவித்திருந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் பணித்திருந்தார்கள். அந்த அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவோடு இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் இருக்கின்ற அணி தான் வெற்றி பெறுகின்ற அணி என்கின்ற வகையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது ஜனநாயகபூர்வமாக, எந்தவித வன்முறையும், பதற்றமும், பணப்பட்டுவாடாவும் இல்லாமல் நடைபெற்ற தேர்தல். இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

விஜய் அறிக்கையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர் இல்லை என்ற கேள்விக்கு:

அப்படி பார்க்க முடியாது. எப்படியாவது கூட்டணிக்குள் சிண்டு முடியும் வேலைகளை நிறைய பேர் பண்றாங்க. அது உடனடியாக கொடுத்த அறிக்கை. தலைவர்கள்கிட்டயும் அவங்க பேசியிருக்காங்க. வெற்றி என்பது எல்லோரும் சேர்ந்து முன்னெடுக்கின்ற வெற்றி தான். மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தலைவர்கள் பங்கெடுத்து பரப்புரை செய்திருக்கிறோம்.

"த.வெ.க வெற்றியிலும் தோல்வி, திமுக தோல்வியிலும் வெற்றி" என மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு:

இந்த இடைத்தேர்தலில் திமுக இன்றைக்கு அதிமுகவை பின்னுக்கு தள்ளியிருக்கு. அதனால அதை வெற்றின்னு சொல்றாங்க. த.வெ.க இன்றைக்கு ஒரு முக்கியமான கூட்டணியை முன்னெடுத்து வெற்றி பெற வைத்திருக்காங்க. அது ஜனநாயக ரீதியான வெற்றி. ஸ்டாலின் அவர்கள் தோல்வியில் வெற்றி" என்று சொல்வது அதிமுகவை முந்தியிருப்பதால் தான்.

டெல்லி, சென்னையில் போராடியவர்கள் கைது குறித்த கேள்விக்கு:

தேர்தல் ஆணையம் இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. தேர்தல் ஆணையமே கரப்ட்டாக, ஒருதலைப்பட்சமாக, ஆளும் வர்க்கத்தின் கூலிப்படையாக செயல்படுகிறது. பாஜகவின் கூலிப்படை தான் தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணைய திருத்த மசோதாவில் உச்ச நீதிமன்ற நீதிபதியை தூக்கிவிட்டு ஆளும் கட்சி அமைச்சரை நியமிக்கிறார்கள். மூன்றில் இரண்டு பேர் ஆதரிப்பவர்கள் தான் உறுப்பினர்களை நியமிக்க முடியும். அப்படி நியமிக்கப்பட்டவர் தான் ஞானேஷ்குமார். அவரது செயல்பாடு பிடிக்கவில்லை என்று எஸ்.எஸ்.சிங், விவேக் ஜோஷி ஆகிய இரண்டு உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். SIR மூலம் நிறைய வாக்குகளை திருடியிருக்கிறார், நீக்கியிருக்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு. நேற்று ராகுல் காந்தி தலைமையிலான 3 நாள் போராட்டத்தில் எங்கள் தலைவர் திருமாவளவன் பங்கெடுத்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது வலிமையாக முன்னெடுக்க வேண்டிய போராட்டம். எத்தனை ஒடுக்குமுறை செய்தாலும் இந்த போராட்டம் வெல்லும்.

முதலமைச்சர் அறையில் வெற்றியை சைகை மூலம் கொண்டாடியது குறித்த கேள்விக்கு:

வெற்றியை பல்வேறு வடிவத்தில் வெளிப்படுத்துறாங்க. பட்டாசு வெடிச்சு, இனிப்பு கொடுத்து வெளிப்படுத்துறாங்க. அவங்க ஸ்டைல்ல அவங்க வெளிப்படுத்துறாங்க. நாங்க எங்க ஸ்டைல்ல மகிழ்ச்சி தெரிவிக்கிறோம்.

தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதில் த.வெ.க நிலைப்பாடு குறித்த கேள்விக்கு:

SIR மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட இயக்கம் திமுக என்று சொல்கிறார்கள். ஆனால் இதுவரை திமுக எந்தவித கருத்தும் சொல்லவில்லை, போராட்டத்திற்கு பங்கெடுக்கவில்லை. இந்தியா கூட்டணியில் உள்ள எம்பிக்கள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள், ஆனால் திமுக பங்கெடுக்கவில்லை. மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுக்கிறார்கள். திமுக ஏன் பங்கெடுக்கவில்லை என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். 13-ம் தேதி, 15-ம் தேதி நடக்கிற போராட்டத்தில் த.வெ.க பங்கெடுக்கும் என்று அனவுன்ஸ் பண்ணிவிட்டார்கள். அனவுன்ஸ் பண்ணாமல் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை மக்கள் வைக்கிறார்கள். அதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும்.

கம்யூனிஸ்ட், நாம் தமிழர் டெபாசிட் இழந்தது குறித்த கேள்விக்கு:

வைப்புத்தொகையை இழந்த இரு கட்சிகள் - ஒன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இன்னொன்று நாம் தமிழர். ஒரு கட்சி இடதுசாரி, இன்னொரு கட்சி சனாதனத்தை ஆதரிக்கின்ற வலதுசாரி. நாம் தமிழர் என்றைக்கோ ஓம் தமிழர் ஆக மாறிவிட்டது. அதன் எதிர்காலம் இல்லை என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் தான் சமூக நீதிக்கான அடையாளங்கள். அவர்களை கொச்சைப்படுத்தும் வேலையை நாம் தமிழர் நிறுத்திக்கொள்ள வேண்டும். பெரியாரை மண் என்று சொல்லி தலித்துகளுக்கு எதிராக நடக்கும் ஆணவப் படுகொலைகளை ஆதரிக்கும் கட்சி சீமான் கட்சி. ஆகவே தான் மக்கள் புறக்கணிக்கிறார்கள். சாதியத்தை, சனாதனத்தை ஆதரிக்கும் கட்சி நாம் தமிழர். மேதகு பிரபாகரன் தலைமையிலான தமிழ்த்தேசிய போராட்டத்தை ஆதரிப்பதாக சொன்ன கட்சி, இன்றைக்கு சாதியத்தை தூக்கிப்பிடிக்கும் கட்சியாக மாறியிருப்பதை இந்த தேர்தல் அப்பட்டமாக காட்டுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலிமையான கொள்கை கோட்பாடு கொண்ட கட்சி. அதன் தலைவரே வெற்றி-தோல்வியை பற்றி கவலைப்படவில்லை" என்று சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட்கள் வலிமையாக வேண்டும் என்பது தான் விடுதலைச் சிறுத்தைகள் நிலைப்பாடு. ஏனென்றால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks