Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது

Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
News Image

நாடு முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம். இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தனது தலைமை தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும், இளைஞர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் அறிவிப்பு

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சி இன்று போராட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி இருந்த போதிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 25,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கே மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.

இதையும் படிங்க: Thiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோவிலில் நடந்த அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?

அபிஜித் திப்கே கைது

இந்நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க மும்பையிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்த ‘கரப்பான் பூச்சி கட்சி’ நிறுவனர் அபிஜித் திப்கே, செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர்கள் கைது

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது எம்.பி.க்கள் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜிர்வால், பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் குண்டு கட்டமாக கைது செய்யப்பட்டனர்.

மாணவர் அமைப்பின் தலைவர் கைது

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பின் தலைவரான நேஹா போரா கைது செய்யப்பட்டுள்ளார். “வழிகளை மறிக்கலாம், ரயில்களை ரத்து செய்யலாம், சிறை வைக்கலாம் ஆனாலும் எங்களை முடக்க முடியாது; போராட்டம் நடத்த விடாமல் எங்களை தடுப்பது இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் வகையில் மத்திய டெல்லி முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks