இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் வீரர்களை புதியதாக தேர்வு செய்வதற்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மினி ஏலம்:

தற்போதே மினி ஏலத்தில் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஒவ்வொரு அணிகளும் பட்டியல் தயார் செய்து வருகின்றனர். அந்த பட்டியலில் பலரது பார்வையிலும் பெரும்பான்மையாக இருப்பவராக திகழ்பவர் ஷாய் ஹோப். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஷாய் ஹோப் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஷாய் ஹோப் அபாரம்:

இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டியில் 2 சதமும், 5 டி20 போட்டிகளில் 4 போட்டியில் பேட் செய்து 2 சதம், ஒரு அரைசதமும் விளாசி அசத்தினார். மொத்தமாக இந்த தொடரில் ஷாய் ஹோப் ஒருநாள் போட்டிகளில் 278 ரன்களும், டி20 போட்டியில் 261 ரன்களும் விளாசினார். அவரது அபாரமான பேட்டிங் ஆற்றலால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 2 டி20 போட்டிகள் மற்றும் 1 ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவைத்தார்.

இவரது பேட்டிங் திறனை கண்டு வியந்த ஐபிஎல் அணிகள் இவரை அணிக்குள் கொண்டு வர மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, 3 அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க போட்டாபோட்டி போடுகின்றனர்.

3 அணிகள் போட்டி:

இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். இதனால், டெல்லி அணி அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டி வருகிறது. இவரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தால் கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராகவோ அல்லது ஒன் டவுன் வீரரராகவே அவரை களமிறக்கும் என்று கருதப்படுகிறது. இவர் விக்கெட் கீப்பராக இருப்பது கூடுதல் பலமாகும்.

ராஜஸ்தான்:

ஷாய் ஹோப்பை குறிவைத்துள்ள மற்றொரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஏலத்தில் எடுப்பதில் ராஜஸ்தான் அணிக்கு நிகர் அவர்களே ஆவார்கள். ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி போன்றோரே அதற்கு சான்று ஆகும். தற்போது ஷாய் ஹோப்பை அவர்கள் அணியில் களமிறக்க குறிவைத்துள்ளனர்.

குஜராத்:

ஷாய் ஹோப்பிற்காக களத்தில் களமிறங்கியுள்ள மற்றொரு அணி குஜராத் டைட்டன்ஸ். இவர்களும் ஷாய் ஹோப்பை தங்கள் அணியில் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூதர்ஃபோர்ட் ஏற்கனவே குஜராத் அணிக்காக ஆடி வரும் நிலையில், இவரையும் அணியில் சேர்த்தால் குஜராத்தின் பேட்டிங் மேலும் வலுப்படும் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுத்தால் அவர் அடுத்த 5 ஆண்டுகள் வரை அணிக்காக ஒரு சொத்தாக இருப்பார் என்று ஒவ்வொரு அணியும் கருதுகிறது. 32 வயதான ஷாய் ஹோப் 49 டெஸ்ட் போட்டிளில் ஆடி 93 இன்னிங்ஸ்களில் ஆடி 2 ஆயிரத்து 518 ரன்கள் எடுத்துள்ளார். 157 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 590 ரன்களும், 75 டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 4 ரன்களும் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் 9 போட்டியில் 183 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மினி ஏலத்தில் ஷாய் ஹோப்பை ஒவ்வொரு அணிகளும் குறிவைக்கும் என்பதால் அவர் நிச்சயம் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article