Chennai Cooum Make Over: சென்னை கூவம் ஆற்றுடன் அடையாறு ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கூவம் நதியை சீரமைக்க திட்டம்:

வணிக பயன்பாட்டில் இருந்த கூவம் நதி ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகள் கலப்பால், மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனை சீரமைக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், இதுநாள் வரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தன முதலமைச்சர் விஜய் கூவம் நதி சீர்படுத்தப்படும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னைவாசிகளின் 100 ஆண்டு கனவான இந்த கூவம் சீரமைப்பு திட்டம் நிஜமாகும் சூழல் உருவாகியுள்ளது. முதலமைச்சர் அளித்த உறுதி வெறும் அறிவிப்பாக இல்லாமல், செயல் வடிவம் பெற தமிழக அரசு ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. அதன்படி, அரசின் TNUIFSL Fund Manager of PDGF மூலம் அதிகாரப்பூர்வ டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

டெண்டரின் நோக்கம் என்ன?

சென்னையில் உள்ள ஆறுகளை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட சிறப்பு நிறுவனம் தான் *Chennai Rivers Transformation Company Ltd (CRTCL). இந்த நிறுவனம் ஏற்கனவே கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா ஆகியவற்றை எப்படி மாற்றலாம் என்பதற்கான Concept திட்டத்தை தயாரித்துள்ளது. அதனை அடிப்படையாக வைத்து முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மாதிரி பகுதிகளில் எப்படி வேலை செய்வது? எவ்வளவு செலவாகும்? என்ன தொழில்நுட்பம் தேவை? சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன? என்பதை துல்லியமாக கூறும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கத் தான் இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

டெண்டரின் விவரம் என்ன?

1. பணியின் பெயர்: Consulting Services for preparation of DPR based on Concept Plan for Pilot Areas for Chennai Rivers Transformation Company Ltd

2. நிதி ஆதாரம்: Project Development Grant Fund (PDGF) - இது நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் DPR தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து உருவாக்கிய சிறப்பு நிதி.

3. மதிப்பீடு: ரூ.23,00,000/- (GST உட்பட)

விவரங்களை https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து தகுதியான நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: Egmore-Tiruchy: இனி சென்னை டூ திருச்சி 130KM ஸ்பீடில் பறக்கலாம்..! 336KM-க்கு அப்க்ரேடாகும் ட்ராக் - ட்ராஃபிக் ஓவர்

விண்ணப்பிக்க அவகாசம்:

23.10.2026 அன்று காலை 11.00 மணியளவில் முன்மொழிவுக்கு முந்தைய ஆய்வுக்கூட்டம் TNUIFSL அலுவலகத்தில் நடக்கும். இதில் நிறுவனங்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் பின்னர் tntenders இணையதளத்தில் வெளியிடப்படும்.

e-Tender சமர்ப்பிக்க கடைசி நேரம் 03-11-2026 காலை 11.00 மணி வரை

3-11-2026 மதியம் 12.30 மணிக்கு e-Tender திறக்கப்படும்.

விரிவான திட்ட அறிக்கையில் என்ன இருக்கும்?

சென்னையில் சுமார் 32 கி.மீ நீளம் கொண்ட கூவம் ஆறு, 42 கி.மீ நீளம் கொண்ட அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவை ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 2015 வெள்ள பாதிப்பிற்கு பிறகு நதி சீரமைப்பிற்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், முழுமையான மாற்றம் வரவில்லை. தற்போது CRTCL மூலம் உலக வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் புதிய DPR-ல் கீழ்க்கண்ட விஷயங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது:

ஆற்றில் கலக்கும் 300-க்கும் மேற்பட்ட கழிவுநீர் குழாய்களை தடுத்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருப்புதல்

ஆற்றின் இருபுறமும் தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை (Riverfront Development) அமைப்பது

படகு போக்குவரத்து சாத்தியக்கூறுகள்

பல்லுயிர் பூங்காக்கள் (Bio-parks) அமைத்தல்

வெள்ள நீரை சேமிக்கும் வழிகள்

இந்த ரூ.23 லட்சம் DPR தான், வருங்காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்திற்கு அடித்தளம் அமைக்கப் போகிறது. அதனால் தான் இந்த சிறிய டெண்டர், சென்னைவாசிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மூச்சு முட்டி நிற்கும் கூவம் நதி மீண்டும் உயிர் பெறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Source: Read Full Article