School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
News Image

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு சூப்பர் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசு பள்​ளி​களில் வினாடி-​வினா மன்​றம் “சொல்! வெல்!’ என்ற புதிய அடை​யாளத்​துடன் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதற்​கான வழி​காட்​டு​தல்கள் வெளியிடப்பட்டுள்ளன

பள்​ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

இதுதொடர்​பாக பள்​ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கையில்: அரசு பள்​ளி​களில் செயல்​பட்டு வரும் வினாடி- வினா மன்​றம் “சொல்! வெல்!’ என்ற புதிய அடை​யாளத்​துடன் வலுப்​படுத்​தப்​பட்டு புதிய உற்​சாகத்​துடன் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மாண​வர்​களின் பொது அறிவை விரி​வுபடுத்​து​வது, கேள்வி கேட்​கும் திறனை வளர்ப்​பது, தகவல்​களை தொடர்​படுத்தி சிந்​திக்​கும் திறனை உரு​வாக்​கு​வது ஆகிய​வையே இம்​மன்​றத்​தின் நோக்​கங்​களாகும்.

இதையும் படிங்க: Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

6 முதல் 9 வகுப்பு மாணவர்கள்

எனவே, வினாடி-வினா போட்​டிகளில் பங்​கேற்​கும் சில மாண​வர்​களுக்​காக மட்​டுமின்றி 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் ஒவ்​வொரு மாண​வ​ரும் கேள்வி கேட்​டு, கற்​று, சிந்​தித்து மேற்​குறிப்​பிட்ட நோக்​கங்​களை அடை​யும் வகை​யில் இந்த மன்​றத்​தின் செயல்​பாடு​கள் அமைய வேண்​டும். வினாடி- வினா மன்​றச் செயல்​பாடு​கள் மூல​மாக அனைத்து மாண​வர்​களுக்​கும் சமமான கற்​றல் மற்​றும் பயிற்சி வாய்ப்பை உறுதி செய்​யும் வகை​யில் தரப்​படுத்​தப்​பட்ட கற்​றல் வளங்​களை வடிவ​மைத்து ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்த வளங்​களை ஒவ்​வொரு வகுப்​புக்​கான வினாடி-​வினா மன்​றத்​தின் பொறுப்​பாசிரியர் பதி​விறக்​கம் செய்து கொண்டு வினாடி- வினா மன்​றப் பாடவேளை​யின்​ போது செயல்​படுத்த வேண்​டும். வினாடி-​வி​னா​வின் பல்​வேறு கேள்வி வடிவங்​கள், விநாடி- வினா நடத்​தும் முறை​கள் மற்​றும் பல்​வேறு சுற்​றுகளுக்கு மாண​வர்​களைப் பள்ளி நிலை​யி​லிருந்தே அறி​முகப்​படுத்​தும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

போட்​டிக்​கான பயிற்சி

இதன்​மூலம் மாநில அளவி​லான வினாடி-​வினா போட்​டிகளில் மாண​வர்​கள் எதிர்​கொள்​ளும் கேள்வி வடிவங்​கள் மற்​றும் சுற்​றுகள், அவர்​களுக்கு முற்​றி​லும் புதிய அனுபவ​மாக இல்​லாமல், ஏற்​கெனவே பள்ளி அளவிலேயே அறி​முக​மாகி பயிற்சி பெற்ற ஒன்​றாக அமைய வாய்ப்​பாக இருக்​கும். பள்​ளி​களில் “சொல்! வெல்!’ வினாடி-​வினா மன்​றம், போட்​டிக்​கான பயிற்சி மைய​மாக மட்​டுமின்றி கேள்வி கேட்​கும், சிந்​திக்​கும் மாண​வர் சமூகத்தை உரு​வாக்​கும் கற்​றல் தளமாக செயல்பட வேண்​டும். இது தங்​களது பள்​ளி​யில் முனைப்​புடன் செயல்​படுத்​தப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks