ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையே வெல்லாது என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட ஆர்சிபி அணிக்காக முதன்முறையாக கோப்பையை வென்று தந்தவர் ரஜத் படிதார். ஆர்சிபி அணிக்காக அடுத்தடுத்து இரு முறையை கோப்பையை வென்று தந்து சிறந்த கேப்டனாக ஆர்சிபி ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

ரஞ்சி கிரக்கெட்டில் ரஜத் படிதார்:

ஆனாலும், இதுவரை அவருக்கு இந்திய அணியில் முறையான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் அவர் ஆடி வருகிறார். பீகார் அணிக்கு எதிராக மத்திய பிரதேச அணியை அவர் வழிநடத்தி வருகிறார்.

இந்தூரில் நடைபெற்ற போட்டியில் பீகார் அணி முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அடுத்து மத்திய பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணிக்காக யஷ் துபே - சாக்ஷம் புரோகித் அபார தொடக்கம் அளித்தனர். யஷ் துபே 84 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்து வந்த ரத்தோர் 28 ரன்களுக்கு அவுட்டானார்.

அபார சதம்:

அடுத்து வந்த சுபம் சர்மா டக் அவுடடாக அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் அபாரமாக ஆடினார். அவர் சாக்ஷம் புரோகித்திற்கு ஒத்துழைப்பு அளித்து அபாரமாக ஆட, மறுமுனையில் அபாரமாக ஆடிய சாக்ஷம் சதம் விளாசினார். அவர் 214 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 132 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பின்னர், ரஜத் படிதாருடன் ஜோடி சேர்ந்த டெயிலண்ர்கள் அடுத்தடுத்து அவுட்டானாலும் ரஜத் படிதார் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பின்வரிசை வீரர்களை வைத்துக்கொண்டு தனி ஆளாக போராடிய ரஜத் படிதார் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் 133 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 109 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டானார். இறுதியில் மத்திய பிரதேசம் 407 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து சிறப்பான பேட்டிங்:

இதையடுத்து ஆடிய பீகார் அணி இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்ப மத்திய பிரதேசத்தின் சரன்ஷ் ஜெயின் மிரட்டலாக பந்துவீசினார். அவரது பந்துவீச்சில் சுருண்ட பீகார் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், பீகார் அணியை மத்திய பிரதேசம் இன்னிங்ஸ் மற்றும் 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

சிறப்பாக ஆடி சதம் விளாசியதுடன் அணியை வெற்றி பெறச் செய்த ரஜத் படிதாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ரஜத் படிதார் சமீபத்தில் இந்தியா வந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராகவும் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார்.

வாய்ப்பு மறுக்கும் பிசிசிஐ:

ஐபிஎல், ரஞ்சி கிரிக்கெட் என இந்தியாவில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை அவர் வெளிப்படுத்தி வரும் சூழலிலும் அவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் ரசிகர்கள் பிசிசிஐ-யை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

Source: Read Full Article