Prem Anand Sinha: புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்.. யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?

Prem Anand Sinha: புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்.. யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?
News Image

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  ஐபிஎஸ், ஐஏஎஸ் மற்றும் காவல் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சரக டிஐஜி, மாவட்ட எஸ்​.பி.க்​களும் தொடர்ந்து மாற்​றப்​பட்​டு, அவர்​களுக்கு புதிய பணி​யிடம் ஒதுக்​கப்​பட்டு வரு​கிறது. இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக செயல்பட்டு வந்த அருண் ஐபிஎஸ் கடந்த ஜூலை மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்

பின்னர் மகேஸ்வரி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?

யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?

2001-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான பிரேம் ஆனந்த் சின்ஹா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உதவி எஸ்.பி.யாகவும், பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.யாகவும் பணிபுரிந்தவர். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில், அண்ணா நகர் துணை ஆணையராகவும், 4 ஆண்டுகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார். அதன் பின்னர்  ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராகவும், தென் சென்னை போக்குவரத்து பிரிவு இணை ஆணையராகவும், தென் சென்னை போக்குவரத்து பிரிவு இணை ஆணையராகவும் பணியாற்றினார்.

பின்னர் 2020ல் மதுரை மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார். அதன் பிறகு தென்மண்டல ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டார். 2022ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த காவல் பணிக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து தாம்பரம் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த நிலையில் பிரேம் ஆனந்த் சின்ஹா தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks