Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?

Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
News Image

Perambur Multi Speciality Hospital: தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் 300 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என, 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார்.

பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை:

சென்னை பெரம்பூர் முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஏழை எளிய மக்கள் அதிகம் உள்ளதால், நீண்டகாலமாக அங்கு நிறைவேற்றப்படாமல் உள்ள பல அத்தியாவசிய கோரிக்கைகள் தவெக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஈடு செய்யும் வகையில் அதிரடி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த தொகுதி மக்கள் ஆன்லைனிலேயே தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அதற்கான தீர்வு கிடைக்கும் வரையிலான, முழு நிலையையும் ஆன்லைனிலேயே அறியும் வகையிலான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் நீட்சியாக பெரம்பூரில் 300 கோடி ரூபாய் செலவில் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என, சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

400 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை

சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, “வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். அதன் முடிவாக பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட எருக்கஞ்சேரியில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

6 ஏக்கரில் மருத்துவமனை அமைவது எங்கே?

தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது பெரம்பூர் தொகுதி அலுவலகத்திற்கு எதிரே, சற்று தொலைவில் ஜி.என்.டி., சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அதனை சுற்றி ஏ.பி.ஆர். மஹால், மைசூரு மஹால், முத்துமாரியம்மன் கோயில் மற்றும்  சாம்ப்ஸ் அகாடமி ஆகியவை உள்ளன.  தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான இந்த நிலத்தின் முன்பகுதியில் பட்டா நிலங்கள் மட்டுமின்றி ஆக்கிரம்ப்பு கட்டடங்களும் உள்ளன. அவற்றை அகற்றி நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாம்.

இதையும் படியுங்கள்: GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்

ரூ.300 கோடியில் அரசு மருத்துவமனை:

300 கோடி ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை வாயிலாக அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கு மட்டுமே 220 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. மீதமுள்ள 80 கோடி ரூபாயில் மருத்துவ கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ள மருத்துவமனைக்கான நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் அடுத்த 5 மாதங்களில் தொடங்கும் என சென்னை மாநகராட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதமில்லாத தரமான மருத்துவ சிகிச்சை

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஓமந்தூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும்.
கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையும் உள்ளன. இந்நிலையில் முன்மொழியப்பட்டுள்ள பெரம்பூர் மருத்துவமனையானது. சிறப்பு சிகிச்சைக்காக வட சென்னை மக்கள் பயணிக்க வேண்டிய தூரத்தைக் குறைப்பதோடு, நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார இடைவெளிகளைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும். மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்கும் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெரும்பாலான நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்புச் சேவைகள் தேவைப்படும் நோயாளிகள், ஓமந்தூரார் மற்றும் கிண்டியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அடிக்கடி அனுப்பப்படுகின்றனர். அந்த பயண நேரத்தை குறைத்து தாமதமின்றி உயர் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய பெரம்பூரில் உள்ள புதிய மருத்துவமனை வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் புற்றுநோயியல் ஆகியவற்றுக்குத் தனித்தனித் துறைகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளதால், வடசென்னை மக்கள் சிகிச்சைக்காக தென் சென்னைக்கோ அல்லது தனியார் மையங்களுக்கோ நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை குறையும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks