NZ vs IND 4th T20: ருத்ரதாண்டவம் ஆடிய நியூசிலாந்து... கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு கடின இலக்கு!

NZ vs IND 4th T20: ருத்ரதாண்டவம் ஆடிய நியூசிலாந்து... கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு கடின இலக்கு!
News Image

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலில் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள்  கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
சொந்த மண்ணிலேயே தொடரை இழந்ததை அடுத்து நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் திட்டத்தோடு ஃபுல் ஃபார்முடன்  இந்திய அணி களமிறங்கி உள்ளது.

4வது டி20 போட்டி

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையாயான 4வது டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. பைவ் சூர்யவன்ஷிக்குப் பதிலாக இஷான் கிஷனும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மயங்க் யாதவும் களமிறக்கப்பட்டனர். நியூசிலாந்தில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை.

ஆரம்பத்தில் தடுமாறிய நியூசிலாந்து

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 34 ரன்களுக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிறிது நேரம் தாக்கு பிடித்த அதிரடி வீரர் ஆலன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கிளென் பிலிப்ஸ்- ப்ரேஸ்வேல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டர். இந்திய அணி பந்து வீச்சை சிக்சர், பவுண்டரியுமாக இருவரும் பறக்க விட்டனர். பின்னர் ப்ரேஸ்வேல் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கிளென் பிலிப்ஸ் சதம்

கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 107 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 259 ரன்கள் எடுத்தது. 260 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய மாயங்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks