NOC தேவையில்லை !! புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி ? TNEB புதிய உத்தரவு

NOC தேவையில்லை !! புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி ? TNEB புதிய உத்தரவு
News Image

"250 ச.அடி வீடுகளுக்கு அனுமதி"

தமிழகத்தில் சில வகை புறம்போக்கு நிலங்களை தவிர்த்து , மற்ற புறம்போக்கு நிலங்களில், 250 சதுர அடி வரை கட்டப்பட்ட வீடுகளுக்கு , அரசு அதிகாரிகளின் தடையில்லா சான்று பெறாமல் , மின் இணைப்பு வழங்க , கடந்த மாதம் , மின் வாரியத்திற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில், மின் வாரியம், பொறியாளர்களுக்கு, மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவுறுத்தல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, புறம்போக்கு நிலங்களில், கட்டட பரப்பு, 250 சதுர அடிக்கு மிகாமல் உள்ள வீடுகளுக்கு மட்டுமே , மின் இணைப்பு வழங்க வேண்டும்.

"பிரிவு அலுவலர் உறுதி செய்ய வேண்டும்"

நீர்வழி , மேய்க்கால் , மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், வன நிலங்கள், ராணுவ குடியிருப்பு பகுதிகள், மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வே உள்ளிட்ட நிலங்கள், மத நிறுவனங்கள், கோவில்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்கள், கோவில் புறம்போக்கு நிலங்களுக்கு, இந்த சலுகை பொருந்தாது.

இதற்கு , தனி பிரிவில் கட்டணம் வசூலிக்க வேண்டும். மின் இணைப்பு வழங்கும் முன், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர், மின் இணைப்பு கோரப்படும் வீடு , தடை செய்யப்பட்ட நில வகைகளில் அமைந்திருக்கவில்லை என்பதை , உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசின் , தமிழ் நிலம் இணையதளம் , மின் பகிர்மான கழக இணையதளத்தை ஒருங்கிணைக்கும் வசதி உருவாக்கப்படும்.

இது நடைமுறைக்கு வரும் வரை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அதிகாரிகளிடம் இருந்து, நிலத்தின் வகைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும். அதன்பின்தான் மின் இணைப்பு வழங்க வேண்டும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks