"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!

"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
News Image

நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பாக மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே புனே, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் இன்று சென்னை வந்திருந்த ராகுல் காந்தி சென்னை தீவுத் திடலில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

நீங்கள் மனதார விரும்புவதை செய்யுங்கள்

அப்போது ராகுல் காந்தி பேசுகையில்: தமிழ்நாட்டின் இரண்டு பேராளுமைகள் திருவள்ளுவர்,பெரியார். உங்கள் கலை, வரலாறு, மண், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளுங்கள். மாணவர்கள் பகுத்தறிந்து தாங்கள் விரும்புவதை மனதாரச் செய்யுங்கள். தமிழகத்திற்கு வருவது எனக்கு பெருமை. தமிழ்நாட்டு ஒவ்வொரு முறை வரும்போது ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன். ஒருவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் அப்படியே பின்பற்றாதீர்கள். மாணவர்கள் எதையும் பகுத்தறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என பெரியார் கூறினார். எல்லாவற்றையும் ஆராய்ந்து, கேள்விகளை எழுப்புங்கள். நீங்கள் மனதார விரும்புவதை செய்யுங்கள் என்றார்.

இதையும் படிங்க: வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?

தமிழ்நாட்டை தொட விட மாட்டோம்

மும்மொழி கொள்கைக்கு ஒப்புக்கொண்டால்தான் தமிழகத்திற்கான நிதியை விடுவிப்பேன் என்றார்கள். புதிய கல்வி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க தொடர்ந்து முயற்சி நடைபெறுகிறது. இந்தியை திணிப்போம் என வெளிப்படையாக சொன்னவர் அமித்ஷா. தமிழக பிரநிதித்துவத்தை குறைக்க தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வரும் மத்திய அரசு. தற்போது தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழ் கலாச்சாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டை தொட விட மாட்டோம் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

வட சென்னை கல்லூரி மாணவி

இதனிடையே கல்லூரி மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ஒரு சகோதரியாக நான் உங்களிடம் கேட்கிறேன். வட சென்னை வியாசர்பாடி என்றாலே அனைவருக்கும் தவறான பார்வை இருக்கிறது. நாங்கள் எவ்வளவு தான் பெரிய பதவிக்கு சென்றாலும் இப்படிதான் என்கிற Stereo Type நமது மீது இருந்து கொண்டே இருக்கிறது. ஆகையால் ஒரு நாளாவது நீங்கள் வியாசர்பாடி பகுதிக்கு வந்து எங்களை சந்தித்து எங்களுடன் கலந்துரையாடி சாப்பிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு ராகுல் காந்தி நிச்சயமாக உங்கள் ஊரான வியாசர்பாடிக்கு வருகிறேன் என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks