Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?

Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
News Image

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனக்கென தன வரலாறு கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ். அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமையை சென்னையுடன் தன்வசம் பகிர்ந்து கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

புதிய பயிற்சியாளர் பொல்லார்ட்:

சமீபகாலமாக இவர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில், இவர்களின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் இலங்கை கேப்டன் மஹிலா ஜெயவர்த்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரரான பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Llord's drip 🔥 @Nike https://t.co/4jnjAWL4Xd
— Mumbai Indians (@mipaltan) October 24, 2026

மும்பை அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆடி வந்த பொல்லார்ட் அவர்கள் கோப்பையை வெல்வதற்கு மிகப்பெரிய தூணாக திகழ்ந்தவர் ஆவார். தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள பொல்லார்ட் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

உத்வேகம்:

என்னுடைய முதல் பணி அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு செய்வதே ஆகும். அதை மீண்டும் கொண்டு வந்துவிட்டால் உத்வேகத்தையும், ஆற்றலையும் கொண்டு வர முடியும். நீங்கள் வான்கடே மைதானத்தில் உள்ளே நடந்து சென்றால் நீங்கள் மஞ்சள், சிவப்பு நிறங்களை காண இயலாது. எங்கும் நீல நிற கொடியையே காண முடியும். அதில் இருந்து ரசிகர்களின் அர்ப்பணிப்பை  காண இயலும். அதுவே எங்களுக்குள்ளும் அதை கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெரும் சிக்கல்கள்:

கடந்த 2020ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 6 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல இயல முடியாமல் தவித்து வருகிறது. ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவிடம் அளிக்கப்பட்டது அந்த அணி ரசிகர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. மீண்டும் கேப்டன்சியை ரோகித் சர்மாவிடம் வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பொல்லார்ட் 189 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 412 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 52 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 16 அரைசதங்கள் விளாசியுள்ளார். 223 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான பொல்லார்ட் மும்பை அணிக்காக 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மீட்பாரா பொல்லார்ட்?

கடந்த 2022ம் ஆண்டுக்கு பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 12 ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடிய அனுபவம் கொண்ட பொல்லார்ட் மும்பை ரசிகர்களுக்காக அணியை மீண்டும் கட்டமைப்பதையே முதல் பணியாக மேற்கொள்வார் என்று கருதப்படுகிறது. அதன் தாக்கம் மினி ஏலத்தில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks