ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைப்பு.

பல்வேறு வசதிகளுடன் பேருந்துநிலையம்

செக்காணூரணி பேருந்து நிலையத்தில் 7 பேருந்து நிறுத்துமிடங்கள், 27 வணிகக் கடைகள், 2 உணவகங்கள், ஆண்களுக்கான 2 காத்திருப்பு அறைகள், பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான 2 காத்திருப்பு அறைகள், ஒரு போக்குவரத்து அலுவலகம், ஒரு காவல்துறை அலுவலகம், ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறை வசதிகள் மற்றும் 21 காய்கறிச் சந்தைக் கடைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. செக்காணூரணி, நூற்றுக்கணக்கான கிராமங்களை இணைக்கும் முக்கியப் பகுதியாக விளங்குகிறது. செக்காணூரணி, நூற்றுக்கணக்கான கிராமங்களை இணைக்கும் முக்கியப் பகுதியாக விளங்குகிறது. நிலுவையில் இருந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி பேருந்து நிலையப் பணிகளையும் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை

இதேபோல், உசிலம்பட்டி பேருந்து நிலையப் பணிகளையும் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செக்காணூரணி பேருந்து நிலையத்தை விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அமைச்சர் தகவல்

பொதுமக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாகப் பயணிக்கவும், பாதுகாப்பாக வெளியேறவும் கூடுதல் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், நிலைமையைச் சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனஎரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.

Source: Read Full Article