MK Stalin Slams TVK: “இந்த கோமாளி கூட்டத்த கண்டுக்காம விட்டுட்டோம்“ - தவெகவை நார் நாராக கிழித்துவிட்ட மு.க. ஸ்டாலின்

MK Stalin Slams TVK: “இந்த கோமாளி கூட்டத்த கண்டுக்காம விட்டுட்டோம்“ - தவெகவை நார் நாராக கிழித்துவிட்ட மு.க. ஸ்டாலின்
News Image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில், திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தவெகவை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், சட்டமன்ற தேர்தலின்போது, தவெகவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விட்டுவிட்டதாகவும், அந்த கோமாளி கூட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாகவும் கூறினார்.

“இது தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல்“

மதுராந்தகம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல, தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கும் தேர்தலும் அல்ல என்று கூறினார். மேலும், இது தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல் என்றும், உங்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என்றும் தெரிவித்தார்.

மேலும், 4 மாதங்களுக்கு முன்பு நீங்கள் ஒருவரை ஜெயிக்க வைத்து அனுப்பினீர்கள், ஆனால், மெஜாரிட்டி இல்லாத ஆட்சிக்கு முட்டு கொடுப்பதற்காக அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு, தற்போது திரும்பி வந்து வெட்கம் இல்லாமல் வேறு சின்னத்திற்கு ஓட்டு கேட்கின்றனர் என்று கடுமையாக விமர்சித்தார்.

அதோடு, தேர்தல் முடிவு வந்து அதில் ஜெயித்த கையோடு, ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தது இதற்கு முன்னர் நடந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், இல்லை... இல்லவே இல்லை, அப்பட்டமாக நடந்த குதிரை பேரத்தால் இந்த தேர்தல் நடக்கிறது என்றும் கூறினார்.

“இவர்களின் திமிரை அடக்க வேண்டும்“

தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டர்லின், ஓட்டு கேட்க வந்த வேட்பாளர்களை எதிர்த்த மதுராந்தகம் மக்கள் தெளிவானவர்கள், மானம் உள்ளவர்கள் என்றும், அவர்களின் ரோஷத்திற்கு எனது பாராட்டுகள் என்றும் கூறினார். மேலும், ஆளும் கட்சியினர் திமிராக பேசுகின்றனர் என கூறிய அவர், தவெக சார்பில் ஒரு நாயை நிற்க வைத்து தேர்தலை சந்திப்போம் என்று பேசுகின்றனர், இது கேவலமான நினைப்பு, மக்களை இளக்காரமாக நினைக்கும் இவர்களின் திமிரை நீங்கள் அடக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டார்.

“கோமாளி கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்“

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பேசிய மு.க. ஸ்டாலின், “நாம் செய்தது ஒரே தவறு தான். தேர்தலுக்கு முன்னர் தவெகவை ஒரு பொருட்டாகவே நினைக்க மறந்துவிட்டோம். கொள்கை எதிரிகளுடன் மோதினோம், இந்த கோமாளி கூட்டத்தை கண்டுக்காமல் விட்டுவிட்டோம்.“ என்று கூறினார்.

மேலும், “SIR-ஆல் பல லட்சம் ஓட்டுகள் பறிக்கப்பட்டது. இப்படி சில காரணங்களால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆட்சி அமைக்கின்ற கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை, யதார்த்தம். முதலமைச்சர் என்னதான் உரத்த குரலில் கத்தினாலும், திமுகவுக்கு மக்கள் வழங்கிய ஓட்டுகளின் தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது.“ என்றும் குறிப்பிட்டார். அதாவது, தவெகவிற்கு சென்ற திமுகவின் கூட்டணிக் கட்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

“தோல்வி பயத்தால் முதலமைச்சர் தெருத் தெருவாக செல்கிறார்“

தொடர்ந்து பேசிய அவர், தோல்வி பயத்தால் மதுராந்தகத்திற்கு முதலமைச்சர் இருமுறை வந்து, தெருத் தெருவாக முதலமைச்சர் செல்வதாக விமர்சித்தார். இடைத்தேர்தலில் முதலமைச்சருக்கு ஏன் இந்த பதற்றம் என கேள்வி எழுப்பிய அவர், அவரது ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

மேலும், இந்த ஏமாற்றுக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்குவதற்கு, மதுராந்தகம் மக்கள் படுதோல்வியை அவர்களுக்கு பரிசாக தர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks