Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி

Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
News Image

Minster Keerthana: தொடர்ந்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாக அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா மீது குற்றச்சாட்டு:

அமைச்சர் கீர்த்தான உடன் இருக்கும் குடும்பத்தினர் அரசு ஒப்பந்தங்களுக்கு, ஒப்பந்ததாரர்களிடமிருந்து கமிஷன் பெற்று வருவதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி சர்ச்சையானது. இதுதொடர்பாக அமைச்சர் கீர்த்தனா 4 பக்கத்திற்கு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, ​​மக்கள் அதை உண்மை என்று தவறாகக் கருதத் தொடங்கக்கூடும். ஆனால், ஒரு பொய் பலமுறை சொல்லப்பட்டாலும் அது உண்மையாகிவிடாது. ஆதாரங்களுக்குப் பதிலாகத் தவறான தகவல்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது.

”நான் லஞ்சம் வாங்கவில்லை”

விமர்சனமும் அவதூறும் ஒன்றல்ல. எனது பணியைக் குறித்து கேள்வி எழுப்புவதற்கும், எனது தனிப்பட்ட அல்லது தொழில்முறை நேர்மை குறித்து திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. இதை நான் மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஊழல் மூலம் ஒரு ரூபாய்கூடப் பெறவில்லை. நான் லஞ்சம் கோரவும் இல்லை, பெறவும் இல்லை. எந்தவொரு நிதி முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.  முதலமைச்சர் ஜோசப் விஜய்  தலைமையிலான இந்த அரசு, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்லாமல், பொது நலனுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

ரூ.3 கோடி கமிஷனா?

சமீபத்திய வாரங்களில், எனக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், அதே கதை வளர்ந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு என்று மாற்றப்பட்டது. திருப்பதியில் நான் அணிந்திருந்த ஒரு சாதாரண ஆபரணத்தை, தங்க நாணயங்களால் ஆன மாலை என்று சித்தரித்தனர். இப்போது, ​​ஒரு பாலம் கட்டுமானப் பணியில் 3 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்படும் எண்களும் கதைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் எதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

இதையும் படியுங்கள்: TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி

தொடர்ந்து பரப்பப்படும் கதைகள்

சில நாட்களுக்கு ஒருமுறை புதிய எண்களைக் கொண்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றால், அது உண்மையான கண்டுபிடிப்பு அல்ல. மாறாக, தீய நோக்கத்துடன் புனையப்பட்ட பொய். சமூக ஊடகங்களிலோ அல்லது பொதுவெளியிலோ மீண்டும் மீண்டும் கூறப்படுவதன் மூலம், இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகள் உண்மையானவை போலத் தோற்றமளிக்கும் நிலையை அனுமதிக்க முடியாது.  ஊழல் குற்றச்சாட்டு என்பது சாதாரண விமர்சனம் அல்ல. அது எனது நேர்மையையும், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெறும் ஊகங்களாலோ அல்லது திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதாலோ நிலைநிறுத்தப்படக் கூடாது. அவை உண்மையான ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை - அமைச்சர் கீர்த்தனா

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உண்மையானவை போல சித்தரிப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனிவரும் காலங்களில், ஊழல் அல்லது முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எதிராகச் சட்டரீதியான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  திட்டமிட்ட பொய்களையும், ஊழல் குறித்த புனையப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். எனது நேர்மையைக் காக்க, சட்டப்பூர்வமான அனைத்து வழிகளையும் நான் பயன்படுத்துவேன்” என அமைச்சர் கீர்த்தனா தனது விரிவான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கேள்வி:

அமைச்சர் உடன் இருக்கும் குடும்பத்தினர் தான் பணம் பெறுவதாக வார இதழில் வெளியாகி இருந்த கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. ஆனால், தான் லஞ்சம் பெறவில்லை என உறுதியாக பேசும் அமைச்சர் கீர்த்தனா, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தன்னைச் சார்ந்த யாருமே பணம் வாங்கவில்லை என்பதை தெளிவாக சொல்லாதது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி. கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறை தவெகவினரும் செய்து முதலமைச்சரின் விஜய் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் எனவும், பினாமிகள் மற்றும் தங்களை சுற்றிய பவர் சென்டர்கள் உருவாவதை அமைச்சர்கள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் நெட்டிசன்கள்  வலியுறுத்துகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks