மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் முன் முதலில் நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்வது அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் கீர்த்தனா கடுமையாக சாடியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவுறும் நிலையில் இரு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டியின் நிலவுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முதலமைச்சரின் விஜயை அவர் கடுமையாக சாடினார். அதுமட்டுமல்லாமல் தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவையும் விமர்சித்தார். இதற்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.
நீங்க செஞ்சதை யோசிச்சு பாருங்க
அவர் வெளியிட்ட பதிவில், “எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும்‌ நீங்கள் கடந்த காலங்களில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளையும் செய்த அந்தர் பல்டிகளையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள்; அவற்றை மக்கள் இன்னும் மறக்கவில்லை!
எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும்‌ நீங்கள் கடந்த காலங்களில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளையும் செய்த அந்தர் பல்டிகளையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள்; அவற்றை மக்கள் இன்னும் மறக்கவில்லை!
‘எவ்ளோ கொழுப்பு, எவ்ளோ திமிரு, எவ்ளோ அகம்பாவம்’ என்று ஒரு பெண்னை பார்த்து மேடையில் கேள்வி…
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) October 3, 2026
‘எவ்ளோ கொழுப்பு, எவ்ளோ திமிரு, எவ்ளோ அகம்பாவம்’ என்று ஒரு பெண்னை பார்த்து மேடையில் கேள்வி கேட்கும் நீங்கள், அரசியல் கருத்து வேறுபாடுகளை முன்வைக்க ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. திருந்தாத ஜென்மங்கள் அதிகாரத்தில் இருந்தால் வார்த்தைகள் இப்படித்தான் அநாகரீகமாக வரும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த மலிவான பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
தனிப்பட்ட தாக்குதல்களையும் தரக்குறைவான வார்த்தைகளையும் அரசியல் ஆயுதமாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற மதிப்பிற்குரிய தலைவர்களை தங்களது கழகத்தின் கொள்கை தலைவர்கள் என்று கூற வேண்டாம். தங்களது கழகத்தில் உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை கொள்கை தலைவர்கள் என்று கூறுவது சரியாக இருக்கும்.
மற்றவர்களுக்கு ‘அகம்பாவம்’ என்று அறிவுரை கூறுவதற்கு முன், தங்கள் சொந்த அரசியல் பேச்சையும் செயல்பாடுகளையும் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தரக்குறைவான பேச்சுகளுக்கும், அரசியல் அணுகுமுறைக்கும் மக்கள் ஜனநாயக முறையில் உரிய பதிலடியை கூடிய விரைவில் வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Source: Read Full Article