Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்

Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
News Image

Min Arunraaj On Nurse: தொகுப்பூதிய செவிலியர்கள் 2,500 பேரை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை ஓரிரு வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்துள்ளார்.

எனக்கு வருத்தம் - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு பொது மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செவிலியர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை சுகாதார பணியாளர்கள்  21 அம்ச கோரிக்கைகளை அளித்திருக்கிறார்கள்.  முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, செவிலியர்கள் மற்றும் இந்த இடைநிலை சுகாதார பணியாளர்களுடைய கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய முயற்சியில தான் இருக்கிறது. சின்ன வருத்தம் என்னவென்றால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதாரத்துறை செயலாளரையோ அல்லது என்னையோ ஒருமுறையாவது நேரில் வந்து சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கலாம்.

முதல் முயற்சியே போராட்டாமா? - அமைச்சர் கேள்வி

கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் கொடுத்து அவற்றை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கலாம். ஆனால் இடைத்தேர்தல் வரும் நேரத்தில் இந்த கோரிக்கைகளை எல்லாம் அரசின் கவனத்திற்கே கொண்டுவராமல், போராட்டத்தையே முதல் முயற்சியாக முன்னெடுப்பது வருத்தமாக உள்ளது. அதுமட்டுமின்றி உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். கோரிக்கைகளை எடுத்துரையுங்கள்,  அரசு நிச்சயமாக உங்களுடைய கோரிக்கைகளை பரிசீலித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் என வலியுறுத்தினோம்.

மனோ தங்கராஜ் என்ன சம்மந்தம்?

ஆனால், தலைமைச் செயலகத்துக்கு வந்த 10 பேர் கொண்ட போராட்டக் குழுவினர், முன்னாள் திமுக அமைச்சர் மனோத் தங்கராஜை தங்களுடன் அனுமதிக்க வேண்டும் என்றனர்.  தன்னையும் அனுமதித்தால் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் வற்புறுத்துகிறார். போராடும் மருத்துவ பணியாளர்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிய தயாராக தான் இருந்தோம். ஆனால் மனோத் தங்கராஜ் விடாப்படியாக நானும் கூட வருவேன் என அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார். அதுதான் நடந்தது.   அதன் பிறகு தான் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்க முடியாமல் போனது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் குழந்தைகளோடும் வந்து இருந்த நிலையில், இரவு நேரமானதால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். அவர்கள் விரும்பியபடியே மனோ தங்கராஜையும் உடன் வரவழைத்து, 21 அம்ச கோரிக்கைகளை பெற்றுள்ளோம்.

இதையும் படியுங்கள்: Bhuvneshwar Kumar: சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20

அரசியல் செய்யும் திமுக..!

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஊக்குத்தொகை, சீருடைப் படி, பேறுகால விடுப்பு மற்றும்  PF உள்ளிட்ட கோரிக்கைக்ளை வலியுறுத்தியுள்ளனர். மீண்டும் அடுத்தகட்ட விரிவான பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளோம். அப்போது, முன்கூட்டியே உங்களை அணுகாமல் போராட்டத்தில் ஈடுபடுவிட்டோம் என போராட்டக்காரர்களும் வருத்தம் தெரிவித்தார்கள். இந்த விவகாரத்தில் திமுக தேவையில்லாமல் அரசியல்  செய்கிறது என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்தை பேணி காக்கும் அரசு என்பதால் தான், இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் போராட்டம் நடத்த கோரப்பட்டபோதும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செவிலியர்களின் பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்படும்.

செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை..!

திமுகவின் கடந்த ஆட்சி காலத்தில் செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததன் நீட்சியாகவே இப்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதை மறைத்து ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார். ஸ்டாலின் செய்யவில்லை. விஜய் அரசாவது செய்யுமா? என்பதே போராட்டக்காரர்களின் முழக்கமாக இருந்தது. தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதனை நிறைவேற்றும் விதமாக முதற்கட்டமாக 2 ஆயிரத்து 500 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பட்ஜெட்டில் இருந்தோம். இதற்கான அரசாணை 2 அல்லது மூன்று வாரங்களில் வெளியாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks