Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி  முக்கிய அப்டேட்!
News Image

கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த திட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தங்களுக்கு ரூ.1000 கிடைக்கவில்லை என்று பெண்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதை அடுத்து பின்னர் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது. இந்த திட்டம் 2023ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தை போலவே மகாராஷ்டிராவில் ரூ.1,500, மத்தியப் பிரதேசத்தில் ரூ.1,500, கர்நாடகாவில் ரூ.2,000 என பெண்களுக்கான நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. டெல்லி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உரிமைத்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வவராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.1000யிலிருந்து ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ரூ.2500 எப்போது கிடைக்கும்?

இதனையடுத்து ஜூன் மாதத்தில் ரூ.2500 வரவு வைக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.2500 உயர்த்தப்படாமல் ரூ.1000 ஜூன் முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எப்போது ரூ.2500 வழங்கப்படும் என குடும்ப தலைவிகள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் மகளிருக்கு ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்திலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அவர்: மகளிருக்கு ரூ.2,500 வழங்குத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது செயல்பாடடில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரிசெய்து கடைக்கோடி மக்களுக்கு ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் முதல்வர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks