அரசு ஸ்கூல் பில்டிங் இடியுது; எங்க அரசு பள்ளி ICU ல இருப்பது போல இருக்குது; உங்க தங்கச்சிகள் புள்ளங்களுக்கு உதவுங்க CM விஜய் அண்ணா; முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த பெண்கள்.

100 ஆண்டுகள் கடந்த பழமையான கட்டடத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பிரதான பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் கடந்த பழமையான கட்டடத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 450 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் போதுமான கட்டடங்கள் இல்லாத நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத நிலையில் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து அவ்வப்போது இடிந்து விழுவதாகவும் பள்ளியை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகளவிற்கு இருப்பதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அரசு தொடக்கப் பள்ளியில் அருகிலேயே பட்டாசு கடைகள் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளதாகவும் தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் அவ்வப்போது கழிவுநீர் உள்ளே வந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகும் , 2023 ஆம் ஆண்டு சமையலறையை பயன்படுத்த முடியாத நிலையில் இடிக்க கூறிய சமையலறையே தற்போது பயன்படுத்தி வருவதாகவும், மாந்தோப்பு பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் என கூறி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

எங்களோட புள்ளங்களுக்காக எப்படியாவது உதவி பண்ணுங்கனா

இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மதுரைக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து மனு அளிக்க முயன்றோம் மனு அளிக்க முடியவில்லை எனக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அப்பகுதி பெண் காளியம்மன் மதுரை வண்டியூர் பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி அடிப்படை வசதிகளே இல்லை, ஆடக மதுரையில அழகரா வந்து நின்றங்க விஜய் அண்ணா, ஸ்கூல் பில்டிங் இடியுது, உங்க தங்கச்சிகள் புள்ளங்களுக்கு உதவுங்க, வேஷ்டி சட்டையில் அழகா இருந்தங்க, உங்க பெயரை சொல்ல கூட எங்களுக்கு தகுதி இல்ல!!உங்க மருமகபிள்ளைகள் படிக்கும் ஸ்கூல்ல குடி தண்ணீர் இல்ல, பாத்ரூம் இல்லை, 2023 ல இடிக்க வேண்டும் னு சொன்ன சமையலறையை தான் பயன்படுத்துகிறார்கள், மனுவோடு வந்தோம் கொடுக்க முடியல எப்படியாவது இத சரி செய்யுங்க நாங்கள் டீ விக்குற காசுல பள்ளிக்கு குடிநீர் வாங்கி கொடுக்குறறோம், சொந்த செலவுல நிழலுக்காக ஷெட் போட்டு கொடுக்குறோம், அரசு ஸ்கூல் பில்டிங் இடியுது; எங்க அரசு பள்ளி ICU ல இருப்பது போல இருக்குது; பச்சை குழந்தைங்க கூட உங்கள பாத்து சிரிக்குறாங்க விஜய் அண்ணா. எங்களோட புள்ளங்களுக்காக எப்படியாவது உதவி பண்ணுங்கனா என கோரிக்கை விடுத்தனர்.

Source: Read Full Article