Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?

Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’  மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
News Image

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சார்பில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்க புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மகக்ளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்கள் தொழில் தொடங்கவும், விவசாயம் உள்ளிட்ட பணிகளை தொய்வின்றி தொடரவும் இந்த கடன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

கடன் வழங்க சிறப்பு முகாம்கள்... https://t.co/LRXU10pMDY | #TNRCS #Loan #SpecialCamp #TNNews #NewsUpdate #ABPnadu https://t.co/Dd0So8JHJs
— ABP Nadu (@abpnadu) October 12, 2026

கூட்டுறவுத் துறை அறிவித்த மெகா கடன் மேளா

அதனடிப்படையில் ஆண்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை வழங்க திட்டமிட்டுள்ள கூட்டுறவுத் துறை. அந்த கடன்களை வழங்கவும், திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கவும் வாரந்தோறும் சிறப்பு கடன் வழங்கும் முகாம்களை அறிவித்து மக்களுக்கு காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

செவ்வாய்கிழமைகளில் சிங்கப்பெண்களுக்கு கடன்

மாவட்டந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவுத் துறை சார்பில் சிறப்பு கடன் வழங்கும் முகாம்களும், மெகா கடன் மேளாக்களும் நடத்தப்படவுள்ளன.  அதனடிப்படையில், செவ்வாய்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன் மற்றும் வீட்டு வசதிக் கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெள்ளிக்கிழமைகள் தோறும் நடைபெறும் கடன் முகாம்களில் இதர முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு கடன் தருகிறது கூட்டுறவுத் துறை?

சிறப்பு முகாம்கள் மூலம் விவசாய கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், வீட்டு வசதி கடன்கள், வீட்டு அடமான கடன்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான கடன்கள், மின் ஆட்டோ உள்ளிட்டவைகள் வாங்குவதற்கான கடன்களும் வழங்கப்படவுள்ளதாக கூட்டுறவுத் துறையின் மக்கள் தொடர்பு துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்க சிறப்பு முகாம்கள்... https://t.co/LRXU10pMDY | #TNRCS #Loan #SpecialCamp #TNNews #NewsUpdate #ABPnadu https://t.co/Dd0So8JHJs
— ABP Nadu (@abpnadu) October 12, 2026

தகுதியுடையவர்களுக்கு நிச்சயம் தரப்படும் கடன்

அதனடிப்படையில், கூட்டுறவு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளதுடன் கூடுதல் விபரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ் – அப் எண்ணை தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks